உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் அங்கீகாரம் அளித்துள்ள
ஒரு மகத்தான மனிதனை, மாபெரும் இஸ்லாமிய அறிவுப் புரட்சியை ஏற்படுத்தி வரும் தலைசிறந்த அறிஞனை முடக்கிப்
போட முயற்சித்திருக்கிறது இன்றைய ஃபாசிஸ அரசுகள்.
மனித சமூகம் எப்போதெல்லாம்
அறிவுப்பூர்வமாக சிந்தித்து சரியான வழியைத் தேரந்தெடுத்து செயல்படுத்த முயற்சிக்கிறதோ
அப்போதெல்லாம் சுய ஆதாய அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களின் அடக்குமுறையை சந்தித்தே
அது மீண்டும், மாண்டும் வந்திருக்கிறது.
அதிகார ஆணவம் தலைக்கேறி
நலிந்த சமூகத்தை முடக்கிப் போடும் இந்த குள்ளநரித்தனம் வரலாற்றில் ஒரு போதும் நிரந்தர
வெற்றியைப் பெற்றதில்லை.
இங்கே முஸ்லிம் சமூகம்
பெற்றிட வேண்டிய பல படிப்பினைகளில் ஒன்று: தான் பயணித்துக் கொண்டிருக்கும் பாதையை சீர்தூக்கிப்
பார்ப்பது தான்.
مِنَ الَّذِيْنَ
فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ
فَرِحُوْنَ
எவர்கள் தங்கள் மார்க்கத்தில்
பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம்.
அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.
(அல்குர்ஆன் : 30:32)
தனக்கு போதிக்கப்பட்ட,
தான் விளங்கியிருக்கிற இஸ்லாமியக் கருத்துக்கள் மட்டுமே சரி, மற்றவை அனைத்தும் வழிகேடு,
ஒரு போதும் ஏற்க முடியாதது என்கிற பிரிவினைவாத சிந்தனைகளைத் தூக்கி எறிந்து விட்டு
உண்மையான இறையச்சத்தோடு இறைவழிகாட்டுதலின் அனைத்து அம்சங்களையும் ஏற்று செயல்படுத்துகிற
விரிவான சிந்தனையை உள்வாங்கிச் செயல்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும்.
முஸ்லிம் என்றால் அவன்
ஒற்றை நம்பிக்கைக்குச் சொந்தக்காரன். ஒரே இறைவழியை, ஒரே வாழ்வியல் நெறியைப் பின்பற்றக்
கூடியவன் என்கிற நிலையிலிருந்து மாறி அவரவர் சரிகாண்பதைப் பின்பற்றுபவர்கள் என்கிற
இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோமே இதை உணர்ந்திடவும் களைந்திடவும் வேண்டியது அவசியம்.
இன்றைய தீவிரவாதத் தொடர்பு,
பொது சிவில் சட்டம், முஸ்லிம் பெண்ணுரிமை பாதிப்பு போன்ற பல அச்சுறுத்தல்களுக்குப்
பின்னால் இருக்கிற சதி " நம்மைப் பிரித்தாளும் தந்திரத்தோடு இஸ்லாமிய வளர்ச்சியை
முடக்கிப் போடுவது மட்டுமல்ல அதற்குக் காரணமாகத் திகழ்கிற இஸ்லாம் குறித்த தவறான புரிதல்கள்தான்
" என்பதை அறிஞர்கள் உணர்ந்து செயலாற்றிட வேண்டும்.
முரண்பட்டால் அதன் இழப்பை,
பாதிப்பை முழு மனித சமூகமும் சந்திக்க நேரிடும்.
وَاَطِيْعُوا اللّٰهَ
وَرَسُوْلَهٗ وَلَا تَنَازَعُوْا فَتَفْشَلُوْا وَتَذْهَبَ رِيْحُكُمْ
وَاصْبِرُوْا اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ
இன்னும் அல்லாஹ்வுக்கும்,
அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் - நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்; (அவ்வாறு
கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள்; உங்கள் பலம் குன்றிவிடும்; (துன்பங்களைச் சகித்துக்
கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 8:46)
மௌலவி: ஹிதாயத்துல்லாஹ்
நூர
No comments:
Post a Comment