திருவள்ளூரில் தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளை மர்மநபர்கள் அடித்து,
நொறுக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், காட்டுகூட்டுச்சாலை, ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் பல
தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு திருவள்ளூர்
மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் பணிக்கு வந்து
செல்வது வழக்கம். இதற்காக தனியார் நிறுவனங்கள் பேருந்து வசதியை ஏற்படுத்தி
கொடுத்துள்ளது.
வேலை முடிந்ததும் பணியாளர்களை பேருந்தில் அழைத்து சென்று அவர்களின்
பகுதிகளில் இறக்கி விட்டுவிட்டு, பின்னர் திருவள்ளூர், ஆயில் மில்,
மணவாளநகர், மேல்நல்லாத்தூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் பேருந்துகளை
நிறுத்தி விடுவார்கள்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் அங்கு
நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதையடுத்து காலையில் ஓட்டுநர்கள் வந்து பார்த்தபேது கண்ணாடிகள்
உடைக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் 23
பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாக மணவாளநகர் போலீசில் அவர்கள்
புகார் அளித்தனர்.
இது குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: இரவில்
மது போதையில் இருந்த இளைஞர்கள்த சிலர் இப்படி செய்திருக்கலாம் எனத்
தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள்
கூறினர்.
No comments:
Post a Comment