ராகுல் காந்தியை பிரதமராக்க காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்
இந்திரா காந்தி பிறந்த நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சி
தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின்
தலைவர் தொல். திருமாவளவன்,. ராகுல் காந்தியை பிரதமராக்க காங்கிரஸ்
தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற இடைவிடாத முயற்சிகளை
மேற்கொண்டிருக்கிறது. அத்துடன் புதுவை நெல்லித்தோப்பு தொகுதி
இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு வெளிப்படையாக ஆதரவு
தெரிவித்து பிரசாரம் மேற்கொண்டார் திருமாவளவன் என்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment