ரூபாய் தட்டுப்பாடு பிரச்சனை தொடர்பாக நிதி அமைச்சர், அதிகாரிகளுடன்
பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
நாடு முழுவதும் கருப்பு பணம் மற்றும் கள்ளப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக
புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ந் தேதி இரவு அறிவித்தார். மத்திய அரசின்
இந்த அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் வங்கிகளில் மக்கள் நீண்ட
வரிசையில் காத்திருந்து தங்கள் பணத்தை மாற்றி வருகின்றனர்.
இதனால் உண்டான குழப்பமான சூழல் காரணமாக நாடு முழுவதும் அசாதாரண சூழல்
நிலவி வருகிறது. ஒரு வாரத்திற்குமேலாகியும் பல இடங்களில் மக்கள் கடும்
சிரமப்பட்டு வருகின்றனர். ஏடிஎம்களும் சரிவர இயங்கவில்லை.
இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் ரூபாய் தட்டுப்பாடு குறித்து
டெல்லியில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிதி அமைச்சர், அதிகாரிகளுடன்
பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளதாகவும், வங்கிகளில் நடைபெற்று வரும் பண
பரிவர்த்தனை குறித்தும் ஆலோசனை நடைபெறுவதாக தகவ%


No comments:
Post a Comment