Latest News

  

இனி ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது... அடுத்து என்ன செய்யலாம்?

 
இன்று நள்ளிரவு முதல் ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி திடீரென அறிவித்துள்ளார். இந்த ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-க்குள் வங்கிகள், அஞ்சலகங்களில் மாற்றிக் கொள்ள்லாம்; தவிர்க்க் இயலாத காரணங்களால் மாற்ற முடியாதவர்கள் மார்ச் 31-ந் தேதி வரையும் மாற்றலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான அதிரடி நடவடிக்கையாக பிரதமர் மோடி இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்: - இன்று நள்ளிரவு முதல் ரூ500; ரூ1,000 நோட்டுகள் செல்லாது. - ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள 50 நாட்கள் அவகாசம் - நவ.10 முதல் டிசம்பர் 30-ந் தேதி வரை ரூ500; ரூ1,000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றலாம். - அஞ்சலகங்கள், வங்கிகளில் ரூ500, ரூ1,000 நோட்டுகளை மாற்றலாம்

- அரசு மருத்துவமனை, பெட்ரோல் பங்குகளில் நவ. 11-ந் தேதி வரை ரூ500, ரூ1,000 நோட்டுகள் செல்லும் - ரூ500, ரூ2,000 புதிய வகை நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. - டிசம்பர் 30-க்குள் தவிர்க்க முடியாத காரணங்களால் மாற்ற முடியாதவர்கள் மார்ச் 31-க்குள் மாற்றலாம் - நாடு முழுவதும் வங்கிகள் நாளை மூடப்படும். - வங்கி, அஞ்சலகங்களில் எந்த பணபரிவர்த்தனையும் நடைபெறாது. - நாளையும் நாளை மறுநாளும் நாடு முழுவதும் ஏடிஎம்கள் மூடப்படும். - விமான நிலையம், ரயில் டிக்கெட், மருந்தகங்களில் ரூ500, ரூ1,000 தற்காலிகமாக செல்லும் - சர்வதேச விமான நிலையங்களில் ரூ500, ரூ1000 நோட்டுகளை மாற்ற சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். - மத்திய அரசின் நடவடிக்கைக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.- நவம்பர் 10-ந் தேதி முதல் புதிய ரூ500, ரூ1,000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும். - பணத்தை மாற்ற ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகள் அவசியம்- மாநில அரசின் பால் விற்பனை நிலையங்களிலும் ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லும். - இடுகாடுகள், மயானனங்களிலும் நவம். 11-ந் தேதி வரை வரை ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லும் - தொடக்கத்தில் நாளொன்றுக்கு ரூ10,000, வாரத்துக்கு ரூ20,000 மட்டுமே வங்கிகளில் இருந்து எடுக்க முடியும். பின்னர் இந்த தொகை அதிகரிக்கப்படும். - ரூ500, ரூ1000 நோட்டுகளை ரூ4,000 வரை எந்த ஒரு வங்கி மற்றும் அஞ்சலகத்திலும் உரிய அடையாள அட்டையை காண்பித்து மாற்றிக் கொள்ள முடியும். இந்த ரூ4,000 அளவுக்குதான் மாற்றலாம் என்கிற கட்டுப்பாடு நவம்பர் 24-ந் தேதி வரை நடைமுறையில் இருக்கும்.

- டிசம்பர் 30-ந் தேதிக்கு பின்னர் ரூ500, ரூ1000 நோட்டுகளை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் உரிய ஆவணங்களுடன் மாற்றிக் கொள்ளலாம் - செக், டிடி, டெபிட், கிரெட்டிட் கார்ட் பணபரிவர்த்தனைகளில் கட்டுப்பாடு எதுவும் இல்லை இவ்வாறு பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.