ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு பிரச்சனையை சீரமைக்க
10,000 கோடி ரூபாய்க்கு சில்லறை நோட்டுகள் தேவைப்படுவதாக அம்மாநில
முதலமைச்சர் சந்திரபாபு நாயு கூறியுள்ளார்.
நாடு முழுவதும் 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என
அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த சில நாட்களாக பொது மக்கள் பல்வேறு
பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். கையில் பணம் இருந்தும் அதை செலவு
செய்யமுடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
செல்லாத 500, 1000 ரூபாயை மாற்ற வங்கி, தபால் நிலையங்களில் மாற்ற
மக்கள் நீண்ட வரிசையில் நின்று மாற்றி வருகின்றனர். பலர் தங்களிடம் உள்ள
ரூபாய் நோட்டுகளை வங்கியிலும், ஏடிஎம் இயந்திரங்களிலும் டெபாசிட் செய்து
வருகின்றனர். ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து மக்கள் மாற்றி வருவதால்
வங்கிகளிலும் சில்லரை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாடு பிரச்சனையை
சீரமைக்க 10,000 கோடி ரூபாய் சில்லறை நோட்டுகள் தேவை என அம்மாநில முதல்வர்
சந்திரபாபு நாயுடு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் 5,
10, 50, 100 ரூபாய் நோட்டுகள் தேவை எனவும் கோரியுள்ளார்.


No comments:
Post a Comment