நேஷ்வில்(யு.எஸ்): பில் க்ளிண்டன் அதிபராக இருந்த போது துணை அதிபராக
இருந்த அல் கோர், ஹிலரி க்ளிண்டனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ய
வருகிறார்.
சுற்றுச் சூழல் ஆர்வலரான அல் கோருக்கு மில்லியனியம் வாக்காளர்கள்
என்றழைக்கப்படும் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உண்டு. அந்த வாக்காளர்களை
ஹிலரி பக்கம் திருப்பும் முயற்சியில் அல் கோர் களம் இறங்குகிறார்.
துணை அதிபர் டூ சுற்றுச் சூழல்
பில் க்ளிண்டனின் எட்டாண்டு ஆட்சி முடிந்த பிறகு 2000ம் ஆண்டின்அதிபர்
தேர்தலில் அல் கோர் போட்டியிட்டார். அவரது சொந்த மாநிலமான டென்னசி
குடியராசுக் கட்சியின் கோட்டை என்பதால், அல் கோரை கைவிட்டுவிட்டது. அங்கு
வெற்றி பெற்றிருந்தால் அதிபர் ஆகியிருப்பார்.
அதையும் மீறி வெறும் 6 அதிபர் வாக்குகள் விச்தியாசத்தில் ஜார்ஜ் புஷ்ஷிடம்
தோல்வியுற்றார்.
அப்போது ஃப்ளோரிடா கவர்னராக புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ் இருந்தார். அங்கு
வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் ஏற்பட்டு வெறும் 537 வாக்கு வித்தியாசத்தில்
, ஃப்ளோரிடாவின் மொத்த அதிபர் வாக்குகளை புஷ் அள்ளிக்கொண்டார்.
கோர்ட்டுக்குச் சென்ற வழக்கு புஷ்ஷுக்கு சாதகமாக வந்தது. அப்பீல்
செல்லலாம் என்ற ஆதரவாளர்களை, வேண்டாம் என்று தடுத்து தோல்வியை
ஏற்றுக்கொண்டார். சட்ட சிக்கல் மூலம் நாட்டில் நிலையற்ற தன்மை ஏற்பட்டு
விடக்கூடாது என்பதாலேயே அப்பீல் செல்வதைத் தவிர்த்தார். அமெரிக்க அளவில்
புஷ்ஷை விட அரை சதவீதம் கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தாலும், தேர்தலுக்கு
பிறகு அவரது செல்வாக்கு இன்னும் அதிகரித்தது.
தனது பொது வாழ்க்கையை சுற்றுச்சூழல் பக்கம் திருப்பினார். நோபல் பரிசும்
வென்றார்.
இப்போதைய இளைஞர்களுக்கு அவர் பெரிய சுற்றுச்சூழல் பாதுகாவலானக தெரிகிறார்.
கல்லூரிகளில் அவருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.
மூன்றாவது வேட்பாளருக்கு திரும்பும் ஆதரவு
உட்கட்சி தேர்தலில் பெர்னி சான்டர்ஸுக்கு இளைஞர்களின் பெரும் ஆதரவு
இருந்தது. அவரையும் இணைத்துக் கொண்டு ஹிலரி கல்லூரிகளுக்கு இலவசக் கட்டணம்
போன்ற திட்டங்களை அறிவித்துள்ளார். சான்டர்ஸும் தேர்தல் களத்தில் ஹிலரிக்கு
ஆதரவு திரட்டி வருகிறார்.. இருந்த போதிலும்இளைஞர்களிடம் ஒபாமாவுக்கு
இருந்த ஆதரவு ஹிலரிக்கு கிடைக்கவில்லை.
அல் கோரை கொண்டு வருவதன் மூலம் இளைஞர்கள் வாக்குகளை, மூன்றாவது வேட்பாளரான
கேரி ஜான்சனுக்கு செல்ல விடாமல் தடுக்க முடியும் என்று ஹிலரி தரப்பு
நம்புகிறார்கள்.
தங்கள் நட்புக்கு பிரதி உபகாரமாக அல் கோரும் ஹிலரிக்கு ஆதரவாக பிரச்சாரம்
செய்ய இசைந்துள்ளார். மில்லியனியம் வாக்காளர்கள் மசிவார்களா?
No comments:
Post a Comment