இந்து தம்பதியர் அதிக அளவு குழைந்தைகளை பெற்றுக்கொள்வது குறித்து
தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர
தொழிற்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்துள்ளார். இது பெரும்
சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாக
கொண்டவர் அமைச்சர் கிரிராஜ் சிங். இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம்
சகரன்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிரிராஜ் சிங்,
இந்தியாவில் இந்து மதம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இந்துக்கள் எண்ணிக்கை
அதிகரிக்கப்பட வேண்டும். ராமர் கோயில் கட்ட வேண்டும் என மக்கள் கோரி
வருகின்றனர். ஆனால் ராமர் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்காமல் எப்படி ராமர்
கோயில் கட்ட முடியும்.
நாட்டில் உள்ள 8 மாநிலங்களில் தொடர்ந்து இந்துக்களின் எண்ணிக்கை
குறைந்து கொண்டே வருகிறது. தேச பிரிவினையின் போது பாகிஸ்தானில் 22 சதவீதம்
இந்துக்கள் இருந்தனர். ஆனால் தற்போது 1 சதவீதமாக குறைந்துள்ளனர். அப்போது
இந்தியாவில் இந்துக்கள் 90 சதவீதமும், முஸ்லிம்கள் 10 சதவீதமும் இருந்தனர்.
ஆனால் தற்போது முஸ்லிம்கள் 24 சதவீதம், இந்துக்கள் 76 சதவீதமாக
குறைந்துள்ளது. எனவே இந்து மக்கள் தங்கள் மக்கள் தொகையை அதிகரிப்பது
குறித்து பரிசீலிக்க வேண்டும். இந்துக்கள் அதிக குழைந்தைகளை பெற்றுக்கொள்ள
வேண்டும் என்றார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்கட்சிகள் கடும்
எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
முன்பு ஒரு முறை, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, நைஜீரிய பெண்ணை திருமணம்
செய்திருந்தால், அவரை காங்கிரஸ் கட்சி தலைவராக ஏற்றிருக்குமா? என கருத்து
தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. பின்னர் தனது
பேச்சுக்கு கிரிராஜ் சிங் வருத்தம் தெரிவித்தது நினனைவு கூறத்தக்கது.
No comments:
Post a Comment