தெற்கு மலேசியாவில் உள்ள பொது மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட தீ
விபத்தில் இந்திய வம்சாவளியினர் 2 பேர் உள்பட 6 பேர் பரிதாபமாக
உயிரிழந்தனர்.
மலேசியாவின் ஜோகூர் பாரு என்ற பகுதியில் இயங்கி வரும் சுல்தானா அமீனா
மருத்துவமனையில் இந்த தீ விபத்து நிகழ்ந்துள்ளது. மருத்துவமனையின் இரண்டாம்
தளத்தில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்து
மருத்துவமனை கட்டிடம் முழுவதும் மளமளவென பரவியது.
இந்த விபத்தில், 4 பெண்கள், இரண்டு ஆண்கள் என 6 பேர் உயிரிழந்தனர்.
இதில் 3 பேர் இந்திய வம்சாவளியினர் என போலீசார் தெரிவித்துள்ளனர். தீ
விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் 80 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்டு,
அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ
விபத்தை தொடர்ந்து அந்த மருத்துவமனையில் இருந்த 100க்கும் மேற்பட்ட
நோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை
கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதேசமயம், இன்னும் 7 பேர் மருத்துவமனை
உள்ளேயே சிக்கிக்கொண்டுள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று
வருவதாகவும் மலேசிய தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது மருத்துவமனையில் 294 நோயாளிகளும், 193 ஊழியர்களும்
இருந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசாரும், தீயணைப்பு துறையினரும்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment