உள்ளாட்சித் தேர்தலில்
அதிமுக அதிரடியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலை
பார்த்த திமுக தொண்டர்கள் அடித்திருக்கும் ஒற்றைவரி கமெண்ட் 'என்னதான்
இருந்தாலும் அதிமுகவில் சென்னை மேயராக யார் வர வேண்டும் என்பதைகூட எங்க
தளபதி ஸ்டாலின்தான் தீர்மானிக்கிறாரே' என்பதுதான்.
உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக அக்டோபர் 17, 19-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. வாக்குகள் அக். 21-ந் தேதி எண்ணப்படுகின்றன.
இதில்
12 மாநகராட்சிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலரான முதல்வர்
ஜெயலலிதா இன்று வெளியிட்டார். இதில் சென்னை மேயர் சைதை துரைசாமிக்கு
மீண்டும் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.
பாலகங்கா, ஜேசிடி பிரபாகரன்
தற்போதைய வேட்பாளர் பட்டியலில் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த பாலகங்கா அல்லது
ஜேசிடி பிரபாகர் பிரபலமானவர்கள். சென்னையில் அதிக வார்டுகளில் அதிமுக
வென்றால் இருவரில் ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்கலாம்.
அன்று சைதை துரைசாமி
இதில் எங்கேயப்பா ஸ்டாலின் வருகிறார் என்ற கேள்விதானே... திமுகவின் அதி
அற்புத விளக்கம் இது.. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
மு.க.ஸ்டாலினை கொளத்தூர் தொகுதியில் வீழ்த்துவதற்கு வலிமையான நபராக
ஜெயலலிதா தேர்வு செய்தது சைதை துரைசாமி. அவரால் ஸ்டாலினை வீழ்த்த
முடியவில்லை. இருந்தபோதும் சைதை துரைசாமியை கவுரவிக்கும் வகையில் சென்னை
மேயராக்கினார் ஜெயலலிதா.
ஜேசிடிபிரபாகர்
தற்போது முடிவடைந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் கொளத்தூரில் ஸ்டாலின்
போட்டியிட்டார். அவரை வீழ்த்த இம்முறை ஜேசிடி பிரபாகரனை களமிறக்கினார்
ஜெயலலிதா. அவராலும் ஸ்டாலினை வீழ்த்த முடியவில்லை.
பிபாரகருக்கு வாய்ப்பு
இருந்தபோதும் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கியதாலே ஜேசிடி பிரபாகரனை மேயராக்க
முடிவு செய்திருக்கிறார் ஜெயலலிதா... அதனால்தான்
வேட்பாளராக்கியிருக்கிறார்..
No comments:
Post a Comment