காவிரி பிரச்சனைக்கு தீர்வுக்காண தமிழக, கர்நாடக முதல்வர்களுக்கு
மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. வியாழக்கிழமை (நாளை) காலை 11.30
மணிக்கு டெல்லியில் நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் கூட்டம்
நடைபெற உள்ளது.
காவிரி பங்கீடு தொடர்பாக, நேற்று உச்சநீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்கு
வந்தபோது, தமிழக-கர்நாடக முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு
ஏற்பாடு செய்ய முடியுமா என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பேச்சுவார்த்தைக்கு 2 நாட்களில் ஏற்பாடு செய்வதாக மத்திய அரசின்
அட்வகேட் ஜெனரல் உறுதியளித்தார். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு
செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வரும்படி,
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமா பாரதி சார்பில்
அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியிலுள்ள ஷ்ராம் சக்தி பவனில் இருமாநில முதல்வர்களுடன் மத்திய
நீர்வளத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். நீர்வளத்துறை அமைச்சர்,
பொதுப்பணித்துறை செயலாளர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை
பெற்றுவருவதால், அவருக்கு பதிலாக பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி
பழனிச்சாமி, இக்கூட்டத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment