கலஹான்டி: ஒடிஷாவில் அடுத்தடுத்து அதிர்ச்சிக்குரிய சம்பவங்கள் தொடர்
கதையாகி வருகின்றன. பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஒருவர் மனைவியின் சடலத்தை
ஆம்புலன்ஸ் இல்லாததால் மருத்துவமனையில் இருந்து 10 கி.மீ. தொலைவு சுமந்து
சென்ற கணவரில் தொடங்கி இன்று உறவினர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் 4 பெண்கள்
மட்டுமே தாயின் சடலத்தை சுமந்து சென்று அடக்கம் செய்துள்ளனர்.
கலஹாண்டி மாவட்டம் டோகரிபடா கிராமத்தைச் சேர்ந்த கனக் சதாபதி என்ற 75
வயது பெண்மணி கடந்த வெள்ளிக்கிழமை இறந்தார். கனக் சதாபதி உடலை அடக்கம்
செய்ய உறவினர்கள் வருவார்கள் என அவரது 4 மகள்களும் காத்திருந்தனர்.
ஆனால் எவருமே கனக் சதாபதியின் மறைவுக்கு போகவில்லை. இதனால் வேறுவழியே
இல்லாமல் சகத் சதாபதியின் உடலை ஒரு கட்டிலில் வைத்து 4 மகள்களும் சேர்ந்து
தூக்கி மயானத்தில் அடக்கம் செய்திருக்கின்றனர்.
இறந்துபோன கனக் சதாபதியின் கணவர் ஒரு தொழுநோயாளி. அவர் 10 ஆண்டுகளுக்கு
முன்னர் டோகரிபடா கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார். அப்பொழுது முதலே கனக்
சதாபதி குடும்பத்தை உறவினர்களும் கிராம மக்களும் கண்டுகொள்ளாமல்
புறக்கணித்து வந்தனர். இது அப்பெண்மணியின் மரணத்திலும் தொடர்ந்தது பெரும்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment