Latest News

நாராயணசாமிக்காக ராஜினாமா செய்த மாஜி எம்.எல்.ஏ. ஜான்குமார் வீட்டில் ஐடி ரெய்டு!

 
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவதற்காக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த ஜான்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுவை சட்டசபை தேர்தலில் நாராயணசாமி போட்டியிடவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்றது. டெல்லி மேலிட லாபிகள் மூலம் முதல்வர் பதவியைக் கைப்பற்றினார் நாராயணசாமி.

அத்துடன் தேர்தலில் போட்டியிடாமலேயே முதல்வர் ஆனதால் 6 மாதத்துக்குள் போட்டியிட்டு அவர் வெற்றி பெற வேண்டும். இந்த நிலையில் நாராயணசாமி போட்டியிடுவதற்காக நெல்லித்தோப்பு எம்.எல்.ஏ. ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனிடையே புதுச்சேரியில் சவரபடையாட்சி பகுதியில் உள்ள ஜான்குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையிட்டனர். இது புதுவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத்து.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.