சென்னை புழல் சிறையில் இருந்து மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 
சிறைக்கு வெளியேதான் ராம்குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சந்தேகம் 
எழுப்பியுள்ளார்.
சென்னை புழல் சிறையில் மின்சார ஒயரைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்து 
கொண்டார் என்பது போலீஸ் கருத்து. ஆனால் யாரும் இதனை நம்புவதாக இல்லை.
களமிறங்கிய திருமா
இதனால் ராம்குமார் உடல் பிரேத பரிசோதனையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த 
விவகாரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் 
கையிலெடுத்து நீதிமன்றப் படிகளேறியுள்ளார்.
வெளியேதான் கொலை?
தற்போது சிறைக்கு வெளியேதான் ராம்குமார் கொல்லப்பட்டிருக்கலாம் என 
திருமாவளவன் சந்தேகம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் 
திருமாவளவன் கூறியதாவது:
கொடுத்த தகவல்கள்...
சிறையில் இருந்து உடல்நலக் குறைவால் ராம்குமார் மருத்துவமனைக்கு அனுப்பி 
வைக்கப்பட்டதாகத்தான் பெற்றோருக்கும் வழக்கறிஞருக்கும் தகவல் 
தெரிவித்திருக்கிறார்கள். இந்த தகவலை வைத்துப் பார்க்கும் போது சிறையில் 
இருந்து மருத்துவமனைக்கு ராம்குமார் அழைத்து செல்லப்பட்டிருக்கலாம்.
திட்டமிட்டு அழைத்து கொலை?
அல்லது யாரோ வெளியில் இருந்து திட்டமிட்டு மருத்துவமனைக்கு ராம்குமாரை 
அனுப்பி வையுங்கள் என கூறியிருக்கலாம். அப்படி அழைத்துச் செல்லப்பட்ட போது 
சிறைக்கு வெளியேதான் ராம்குமாரை கொலை செய்திருக்கிறார்கள் என வலுவாக 
சந்தேகிக்க முடிகிறது.
 




 
No comments:
Post a Comment