தான் விவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான செய்தி உண்மைதான் என
செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு தொழிலதிபரான அஸ்வின் ராம்குமாரை நடிகர் ரஜினிகாந்தின்
மகளான செளந்தர்யா ரஜினிகாந்த் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு
மகனும் உள்ளார். திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் கடந்த சில மாதங்களாக
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும்
தனித்தனியாக வசித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின.
மேலும் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் கடந்த சில தினங்களாக
செய்தி வெளியாகின. அதனை தற்போது செளந்தர்யா ரஜினிகாந்த் உறுதி
செய்துள்ளார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள
செளந்தர்யா ரஜினிகாந்த், தனது திருமண வாழ்வு குறித்து வெளியான செய்தி
உண்மைதான் என்று கூறியுள்ளார். தாங்கள் இருவரும் கடந்த ஓராண்டிற்கும் மேலாக
பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், விவாகரத்து பெறுவது குறித்து ஆலோசித்து
வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது சொந்த வாழ்க்கை குறித்த
விவாதங்களை தவிர்க்குமாறும் செளந்தர்யா ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.


No comments:
Post a Comment