காவிரி பிரச்சனையில் பெங்களூருவில் 52 தமிழக பேருந்துகளை தீக்கிரையாக்கிய வன்முறை கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது. இதற்கு எதிராக பெங்களூருவில் வன்முறை வெடித்தது.
பெங்களூர் டீசவுசா நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
கே.பி.என். நிறுவனத்துக்கு சொந்தமான 52 பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
பெங்களூரில் உள்ள 9 தீயணைப்பு வண்டிகள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை
அணைத்தன.
கன்னட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பேர் இந்த தீவைப்பு சம்பவத்தில்
ஈடுபட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் டீசவுசா
நகர், வீர பத்ரா நகரைச் சேர்ந்த 7 பேர் இதுவரை சிக்கியுள்ளனர்.
ரக்ஷித், சதீஷ், கிரண், கெம்பேகவுடா, பிரகாஷ், லோகேஸ், சந்தன் ஆகிய 7 பேரை
போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில்
அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறையால் ரூ.12 கோடி முதல் ரூ.14 கோடி வரை இழப்பு
ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


No comments:
Post a Comment