காவிரிப் பிரச்சினையில் தனக்கு எதுவுமே தெரியாது என்பது போல இருக்கிறார். இது கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும் என்று சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறியுள்ளார். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமி இன்று கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பஸ் நிலையம் அறுகே கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் சட்டசபை அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், காவிரிப் பிரச்சினையில்
நமக்கு சாதகமான சூழல்தான் உள்ளது. எனவே நாம் அமைதி காக்க வேண்டும்.
இப்பிரச்சினையில் சுமூகத் தீர்வு காண வேண்டியவர் பிரதமர் நரேந்திர மோடி.
ஆனால் அவர் தனக்கு ஒன்று தெரியாதது போல இருக்கிறார்.
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பேச அனுமதிக்கப்படுவதில்லை. சபாநாயகர்
தனபால் ஒரு தலைபட்சமாகவே நடந்து வருகிறார் என்று ராமசாமி கூறியுள்ளார்.
No comments:
Post a Comment