வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கியின் புகாரின் அடிப்படையில் லண்டனுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய்மல்லையா மீது சிபிஐ புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. அரசு வங்கிகளில் பெற்ற ரூ.9 ஆயிரம் கோடி கடனை திரும்ப செலுத்தாததால் பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே அவர் லண்டனுக்கு தப்பி சென்று அங்கேயே தங்கியுள்ளார்.
தற்போது ஸ்டேட் வங்கியில் பெற்ற கடனை திரும்ப செலுத்தவில்லை என வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் புகார் செய்தது. இதைத் தொடர்ந்து விஜய் மல்லையா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் செக் மோசடி வழக்கில் டெல்லி நீதிமன்றத்தில் விஜய் மல்லையா ஆஜர் ஆகாததால் ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.


No comments:
Post a Comment