அதிமுகவின் திருப்பூர் லோக்சபா எம்.பி. சத்தியபாமா மீது அவரது கணவர் வாசுவே சரமாரியாக புகார் தெரிவித்துள்ளார். அத்துடன் சத்தியபாமாவுக்கு விவகாரத்து நோட்டீஸையும் அனுப்பியுள்ளார் கண்வர் வாசு. அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக சசிகலா புஷ்பா. ஜெயலலிதா தம்மை அடித்ததாக கூறி பெரும்களேபரத்தையே ஏற்படுத்தியவர். தற்போது நான் நினைத்தால் தமிழக அரசியலை திருப்பிப் போடுவேன் என ஜெயலலிதாவுக்கு சவால்விட்டுக் கொண்டிருக்கிறார். இவர் மீது ஏகப்பட்ட புகார்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதனால் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்திடம் தஞ்சமடைந்துள்ளார் சசிகலா புஷ்பா.
சர்ச்சையில் சத்தியபாமா இதனிடையே அதிமுகவின் லோக்சபா பெண் எம்.பி. ஒருவரும் பஞ்சாயத்தில் சிக்கியுள்ளார். அதிமுகவின் திருப்பூர் எம்.பி.யான சத்தியபாமா மீது சரமாரி புகார் தெரிவித்திருப்பது அவரது கணவர் வாசுதான்...வேறு யாருமல்ல..
வக்கீல் நோட்டீஸ் தற்போது சத்தியபாமாவுக்கு விவகாரத்து கோரி கணவர் வாசு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வழக்கறிஞர் ஜாகீர் உசேன் அனுப்பியுள்ள அந்த நோட்டீஸில் விவகாரத்துக்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளதாவது:
பணம்....பணம்... கோபி நகராட்சி தலைவர் ஆன பின்னர் கணவர் வாசுவை உதாசீனப்படுத்த தொடங்கினீர்கள். கணவர் வாசுவுக்கு தெரியாமல் பல இடங்களில் அவர் பெயரில் கடன் பெற்றுள்ளீர்கள்.
கடன்கள்... லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தபோது பலரிடம் பணம் பெற்று தங்களுக்கு வாசுதான் கொடுத்துள்ளார். அதேபோல் அவரது விவசாய நிலங்களை அடமானம் வைத்து ரூ2 கோடி பெற்றுத்தர வற்புறுத்தினீர்கள்.அதன்பின் சிகிச்சை என்ற பெயரில் அவரை அடைத்து வைத்திருக்கிறீர்கள்.
மனம்போன போக்கில்... மனம் போன போக்கில் வாசுவை தவிர்த்து 2 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறீர்கள். இனி உங்களுடன் சேர்ந்து வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் உங்களது செயல்கள் தன் நலனுக்கு ஊறு விளைவிப்பதாக இருக்கும் என கணவர் வாசு கருதுகிறார். ஆகையால் 1990ல் இருவருக்கும் ஏற்பட்ட திருமணத்தை ரத்து செய்ய மனு தாக்கல் செய்வதற்கு தாங்கள் முன்வர வேண்டும்.
விவகாரத்து வழக்கு... அப்படி தவறும் பட்சத்தில் என் கட்சிக்காரரான வாசு தங்கள் மீது விவாகரத்து வழக்கு தாக்கல் செய்வார். அதனால் ஏற்படும் சகல செலவுகளுக்கும் நீங்களே முழு பொறுப்பேற்க நேரிடும். இவ்வாறுநோட்டீ
ஏன் நோட்டீஸ்? இதுகுறித்து சத்தியபாமாவின் கணவர் வாசு கூறுகையில், என்னை ரூ1 கோடிக்கு கடன்காரன் ஆக்கியுள்ளார், தன்னிச்சையாக செயல்படுகிறார். 2 மாதமாக அவரிடம் பேச முயற்சிக்கிறேன்; பிடி கொடுக்க மறுக்கிறார். என் வாழ்க்கையை நான் தீர்மானிக்க தயாராகி விட்டேன். அதற்காகத்தான் விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன், என்றார்.
No comments:
Post a Comment