தன்னை கொன்றவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்தாலும், என்னிடம் இருந்து தப்ப முடியாது. வருகிற அமாவசைக்கு பின் பழிவாங்கும் வேலையை ஆரம்பிக்கப்போகிறேன் என்று சுவாதி ஆவி கூறியதாக ஆவிகளிடம் பேசும் அமுதன் என்பவர் பரபரப்பை கிளப்பியுள்ளார். கடந்த ஜூன் 24ம் தேதி காலை 6.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் சுவாதி கொடூரமான முறையில் வெட்டி கொல்லப்பட்டார். இந்த கொலையில் செங்கோட்டை மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார். ராம்குமார் குற்றவாளி என்று அரசு தரப்பு கூறினாலும் ராம்குமார் அப்பாவி என்றும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் ராம்குமாரின் பெற்றோர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
நுங்கம்பாக்கம் பக்கம் அலைகிறதாம் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதியின் ஆவி அலைவதாக வதந்தி பரவி வருகிறது. ரயில் நிலையத்தின் அருகில் குடியிருப்பவர்களும் ஆவி அலைவதாக அச்சத்துடன் கூறி வருகின்றனர்.
ராத்திரியில் பார்த்த பவார் கடந்த ஆகஸ்ட் 16ம்தேதியன்று பீகாரில் இருந்து சென்னை வந்து மெட்ரோ ரயில் பால வேலைக்காக வந்திருக்கும் ஸ்ரீபவார் என்பவர் சுவாதி ஆவியை பார்த்ததாக கூறியிருக்கிறார். சேத்துபட்டில் நண்பர்களோடு இருக்கும் இவர் 16ம் தேதியன்று இரவு பணி முடிந்து சேத்துப்பட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
தலைவிரி கோலமாக அழுது கொண்டிருந்தாராம் சுவாதி இரவு ஒருமணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வண்டி நின்றது, யாரும் இல்லை ரயிலிலும் கூட்டம் இல்லை. சுவாதி இறந்து கிடந்த இடத்தில் தலைவிரி கோலமாக சுவாதி உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாரம். அதிர்ச்சியடைந்த பவார் இறங்கி ஓட்டம் எடுத்துள்ளார். படுவேகமாக ஸ்டேஷனை விட்டு வெளியேறி, பின் ஆட்டோ பிடித்து வீடு போய் சேர்ந்துள்ளார். காய்ச்சல் அதிகரிக்கவே வேலைக்கும் போகவில்லையாம். சுவாதி ஆவியைப் பார்த்து அஞ்சியதாக அவர் நண்பர்கள் கூறியுள்ளார்.
டெஸ்ட் செய்யப் போனவரும் பார்த்தாராம் சுவாதி ஆவி அலைவது உண்மையா என்று ஆராய்ந்து பார்க்க வாலிபர் ஒருவர், அதை சவாலாக எடுத்துக்கொண்டு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு தனியாக சென்றுள்ளார். அப்போது பயணிகள் அமரும் இடத்தில் ஒரு பெண் தலையை விரித்து போட்டு அமர்ந்து கொண்டிருந்தாராம்.
சுவாதி ஆவி அந்த வாலிபர் முன்னோக்கி செல்ல சிறிது நேரத்தில் அங்கிருந்த பெண்ணை காணவில்லை. இவர் பயந்து போய் வந்த வழியே திரும்ப சென்றுள்ளார். திடீரென்று அந்த பெண் உருவம் சிரித்து கொண்டு அவர் முன்னே தோன்றியதாம். உடனே அவர் அலறியடித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதை அவர் சமூக வலைதளத்தில் பதிவிட, அதை ஒருவர் பகிர்ந்துள்ளார். சுவாதி ஆவியாக அலைவதாக வதந்தி பரவி வருவதால் இரவு நேரத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு செல்பவர்கள் அச்சமடைந்துள்ளன
ஆவி அமுதன் ஆவி அமுதன் என்பவர் அவ்வப்போது, ஆவிகளிடம் தான் பேசி வருவதாக கூறி பரபரப்பை கிளப்பி வருபவர் ஆவார். கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஜெயலலிதாதான் முதல்வர் என்று எம்.ஜி.ஆர் ஆவி தன்னிடம் கூறியதாக பரபரப்பை ஏற்படுத்தியவர். அதேபோல், ஆப்ரஹாம் லிங்கன், லெனின், இந்திராகாந்தி ஆகிய ஆவிகளிடம் தான் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன் என்று கூறிவருகிறார்.
பழிவாங்கப் போவதாக சபதம் இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், தான் சுவாதி ஆவியிடம் பேசியதாக தெரிவித்தார். அவரிடம் பேசிய சுவாதி, தான் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும், தன்னை கொலை செய்தவர்களை விரைவில் பழி தீர்ப்பேன். அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும் என்று கூறியதாம்.
பீதி கிளப்பும் ஆவி அமுதன் மேலும், ராம்குமார் மிகவும் அமைதியானவன், தன்னை கொன்றவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்தாலும், என்னிடம் இருந்து தப்ப முடியாது. வருகிற அமாவசைக்கு பின் நான் பழிவாங்கும் வேலையை ஆரம்பிக்கப்போகிறேன் என்று சுவாதி கூறியதாக அவர் கூறி பீதியை கிளப்புகிறார். அதேபோல், உண்மையான குற்றவாளி யார் என்பதை பலி வாங்கிவிட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளதாம் சுவாதி ஆவி. ஆள் ஆளுக்கு சுவாதி ஆவியை பார்த்ததாகவும், பேசியதாகவும் கூறுவதால் சுவாதி படுகொலை வழக்கு மேலும் பரபரப்படைந்துள்ளது.
No comments:
Post a Comment