தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த சண்முகநாதன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், மாஃபா கே.பாண்டியராஜன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அமைச்சரவை இன்று திடீரென மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி பால்வளத் துறை அமைச்சர் பதவியிலிருந்து எஸ்.பி.சண்முகநாதன் விடுவிக்கப்பட்டார். சண்முகநாதன் கவனித்து வந்த பால்வளத் துறையை கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மாஃபா கே.பாண்டியராஜன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையும் மாஃபா பாண்டியராஜனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த பெஞ்சமின் ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையின் பேரில் ஆளுநர் ரோசய்யா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் நாளை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment