முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள நிலையிலும் கூட சற்றும் கலங்காமல் படு தில்லாகத்தான் இருக்கிறாராம் சசிகலா புஷ்பா. அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து அவர் தீவிர ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் ஜெயலலிதா என்னை அறைந்தார். சசிகலா என்னை மிரட்டினார் என்று கூறி நாட்டையே அதிர வைத்தவர் சசிகலா புஷ்பா. தற்போது அதிமுகவை விட்டு நீக்கப்பட்டு விட்டாலும் கூட எம்.பியாக வலம் வருகிறார். முதல்வர் ஜெயலலிதா மீது டெல்லி போலீஸில் புகார் கொடுத்துள்ள சசிகலா புஷ்பா, நிறுத்தி நிதானமாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறாராம்.
கூட யாரும் இல்லை அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு விட்டதால் இத்தனை காலமாக சசிகலா புஷ்பாவுக்கு பக்க பலமாக இருந்த பல முக்கியப் புள்ளிகள் விலகி விட்டனராம். ஆனாலும் சசிகலா புஷ்பா கலங்கவில்லையாம்.
தைரியமாக இருக்கிறார் முன்பை விட இப்போது தெளிவாகி விட்டாராம். தைரியமாக இருக்கிறாராம். நிதானமாக யோசிக்கிறாராம். தன்னிடம் தொடர்ந்து விசுவாசமாக இருக்கும் ஒரு சில நண்பர்கள், குடும்பத்தார், உறவினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளாராம்.
எந்தக் கட்சி சரிப்பட்டு வரும்? சசிகலா புஷ்பாவுக்கு எந்தக் கட்சி சரிப்பட்டு வரும் என்று இவர்கள் விதம் விதமாக ஆலோசனை கொடுத்து வருகிறார்களாம். ஆனால் எதுவும் சசிகலா புஷ்பா மனதைத் தொடும் வகையில் இல்லையாம்.
மனதைத் தொடலையே ஒரு ஐடியாவும் மனதைத் தொடும் வகையில் இல்லாததால் தானே தனது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து யோசித்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்.
காங்கிரஸ் மட்டும் கிடையாது அதேசமயம், காங்கிரஸ் கட்சியில் நிச்சயம் சசிகலா புஷ்பா சேர மாட்டார் என்கிறார்கள். காரணம் அங்கு ஏற்கனவே குஷ்பு, நக்மா, விஜயதாரணி என கடும் போட்டி இருப்பதால் அது நமக்குச் சரிப்படாது என்று கூறி விட்டாராம் சசிகலா புஷ்பா.
நப்பாசையில் பாஜக அதேசமயம், பாஜக தலைவர்களில் சிலர், சசிகலா புஷ்பா இங்கு வந்தால் நன்றாக இருக்கும். அதை வைத்து கட்சியில் கொஞ்சம் பரபரப்பையும் கூட்டலாம், கலகலப்பையும் காட்டலாம் என்ற நப்பாசையில் உள்ளனராம்.


No comments:
Post a Comment