ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பங்களிப்பு அனல் பறக்க தொடங்கியுள்ளது. தங்க மங்கையாக முடிசூட்டுவார் என எதிர்பார்க்கப்படும் பி.வி.சிந்து இன்று நடைபெறும் பேட்மின்டன் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினை சந்திக்க உள்ளார். பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படும் மற்றொரு வீராங்கனை ஆதிதி அசோக் கோல்ப் ஆட்டமும் இன்று நடைபெற உள்ளது.
இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள் குறித்த விவரம்:
மாலை 4 மணிக்கு தொடங்கும், மகளிர் 3வது சுற்று கோல்ப் ஆட்டத்தில் ஆதிதி அசோக் பங்கேற்கிறார்.
மாலை 6.55 மணிக்கு நடைபெறும், மகளிர் ஒற்றையர் பேட்மின்டன் பைனலில், இந்தியாவின் பி.வி.சிந்து, ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கரோலினா மரினை சந்திக்கிறார். நாடே ஆவலாக எதிர்பார்த்திருக்கும் போட்டி இதுவாகும். இரவு 7.02 மணிக்கு தொடங்கும், ஆடவர் 57 கிலோ பிரிவு, குத்துச் சண்டை 1/8 இறுதி சுற்று, ஆட்டத்தில், இந்தியாவின் சந்தீப் தோமர், ரஷ்யாவின் விக்டர் லெபதேவை எதிர்கொள்கிறார். இரவு 11 மணிக்கு நடைபெறும், பெண்களுக்கான 20 கி.மீ ரேஸ் வாக் போட்டியில், இந்தியாவின் கவுஷ்பிர் கவுர் பங்கேற்கிறார். அதிகாலை 5.10 மணிக்கு நடைபெறும் பெண்களுக்கான 4 x 400m ரிலே ரவுண்ட் மற்றும் அதிகாலை 5.40 மணிக்கு நடைபெறும் ஆடவர் 4 x 400m ரிலே ரவுண்ட் போட்டிகளிலும் இந்திய வீரர், வீராங்கனைகள் பங்குபெறுகிறார்கள்.


No comments:
Post a Comment