தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா தம்மை கன்னத்தில் அறைந்ததாக ராஜ்யசபாவில் திடுக்கிடும் புகார் தெரிவித்த எம்.பி. சசிகலா அடுத்த நிமிடமே அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.யாக 2014-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா புஷ்பா தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் சிக்கியவர். குடிபோதையில் அதிமுக நிர்வாகி ஒருவருடன் ஆபாசமாக சசிகலா புஷ்பா பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அப்போது அவர் மீது ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர் திமுகவின் ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவுடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் பல வெளியாகி இருந்தது. அப்போது ஜெயலலிதா அமைதியாக இருந்து வந்தார். இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவா எம்.பி.யை சசிகலா புஷ்பா சரமாரியாக சனிக்கிழமையன்று தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஜெயலலிதாவிடம் சசிகலா புஷ்பா நேற்று விளக்கம் அளித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று ராஜ்யசபாவில், பெண் எம்.பி.யான தமக்கு பாதுகாப்பு இல்லை; தாம் ராஜினாமா செய்யும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளேன் என்று கண்ணீர்மல்க பிரச்சனையை கிளப்பியிருந்தார் சசிகலா புஷ்பா. மேலும் அதிமுக பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா தம்மை அறைந்ததாகவும் தமது எம்பி பதவியை ராஜினாமா செய்யுமாறு நிர்பந்திப்பதாகவும் தாம் நாட்டுக்கு சேவையாற்ற விரும்புகிறேன் என்றும் சசிகலா புஷ்பா கூறினார். இப்படி சசிகலா புஷ்பா புகார் சொன்ன சில நொடிகளில் அவரை அதிமுகவில் இருந்து நீக்கி ஜெயலலிதா அதிரடியாக உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment