கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் தே.மு.தி.க இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதலில் தனித்து போட்டி என அறிவித்த விஜயகாந்த், மக்கள் நலக்கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்தித்தார்.
இதற்கு, விஜயகாந்தின் நம்பிக்கைக்குரியவராக கருதப்பட்ட எம்.எல்.ஏ சந்திரகுமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பார்த்திபன், சேகர், மூன்று மாவட்டச் செயலாளர்கள் விஜயகாந்துக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதைத் தொடர்ந்து, சந்திரகுமார் உள்பட போர்க்கொடி தூக்கிய அனைவரையும் கட்சியில் இருந்து விஜயகாந்த் நீக்கியதோடு, அன்றே நீக்கப்பட்டவர்கள் பொறுப்புக்கு புதியவர்களை நியமித்தார்.
இதையடுத்து, தே.மு.தி.க.வில் இருந்து நீக்கப்பட்ட அனைவரும் சேர்ந்து மக்கள் தே.மு.தி.க என்ற புதிய அமைப்பை தொடங்கினர். தற்போது, இந்த அமைப்பை தி.மு.க.வுடன் இணைக்கும் வேலை நடந்து வருகிறது.
இந்நிலையில், மக்கள் தே.மு.தி.க ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இதில் சந்திரகுமார், எஸ்.ஆர்.பார்த்திபன் உள்பட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் சந்திரகுமார் கூறுகையில், ''சேலத்தில் நடைபெறும் தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் லட்சக்கணக்கான தே.மு.தி.க.வினர் இணைவார்கள்'' என்றார்.
இதைத்தொடர்ந்து பார்த்திபன் கூறுகையில், ''தே.மு.தி.க.வை வழிநடத்தும் ஆற்றலும், திறமையும் விஜயகாந்திடம் இல்லை. எனவே, உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு தே.மு.தி.க.வை பா.ஜ.க.வுடன் இணைக்க
நன்றி : ஆனந்த விகடன்


No comments:
Post a Comment