பேஸ்புக் மூலம் அறிமுகமான சுவாதியைத் தான் ஒருதலையாகக் காதலித்ததாகவும், ஆனால் அதனை ஏற்க மறுத்த அவர் தன் தோற்றத்தை மோசமாக விமர்சித்ததால் அவரைக் கொலை செய்ததாகவும் கொலையாளி ராம்குமார் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாகத் தெரிகிறது. கடந்த மாதம் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார் இன்போசிஸ் ஊழியரான சுவாதி. இந்த கொலை சம்பவம் நடந்து எட்டு நாட்களுக்குப் பின்னர் நேற்று முன்தினம் இரவு கொலையாளி ராம்குமாரை செங்கோட்டை அருகே போலீசார் கைது செய்தனர். போலீசார் சுற்றி வளைத்ததை அறிந்து தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் நெல்லை மருத்துவமனயில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொண்டையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால் அவரால் சரிவர பேச இயலவில்லை. இதனால், அவரிடம் வாக்குமூலம் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், ராம்குமாருக்கு மயக்கம் தெளிந்தபோதெல்லாம் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்படி, நுங்கம்பாக்கம் போலீஸ் துணை கமிஷனர் தேவராஜ் ராம்குமாரிடம் விசாரணை நடத்தினார். அப்போது சுவாதியை கொன்றது ஏன்? என ராம்குமாரிடம் அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராம்குமார் அளித்த பதிலாவது:-
பேஸ்புக் அறிமுகம்... நான் எப்போதும் பேஸ்புக் பார்த்துக் கொண்டு இருப்பேன். அதில் தான் சுவாதி எனக்கு பழக்கமானார். பின்னர் வாட்ஸ்-அப் மூலமும் அவரிடம் தொடர்பு கொண்டேன். அடிக்கடி அவருக்கு வாட்ஸ்-அப்பில் செய்திகள் அனுப்புவேன். அவரும் பதில் அனுப்புவார். இதைத் தொடர்ந்து அவரை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. எனவே சென்னை சென்றேன்.
நட்பு... சென்னையில் சுவாதி வீட்டிற்கு அருகிலேலேயே மேன்சன் ஒன்றில் அறை எடுத்து தங்கினேன். சுவாதி வேலைக்கு செல்வதை நோட்டுமிட்டு அவரை பின் தொடர்ந்து சென்று என்னை அறிமுகம் செய்தேன். பேஸ்புக் நண்பர் என்பதால் சுவாதியும் என்னிடம் நட்பாக பேசினார்.
கண்டிப்பு... என்னைப் போலவே சுவாதிக்கு பல நண்பர்கள் உண்டு. அவர்களிடமும் சுவாதி அடிக்கடி பேசுவார். அது எனக்கு பிடிக்கவில்லை. என்னிடம் மட்டுமே பேச வேண்டும் என சுவாதியிடம் நான் வலியுறுத்தினேன். ஆனால், அதற்கு மறுப்புத் தெரிவித்த சுவாதி என்னைக் கண்டித்தார்.
காதலை ஏற்க மறுப்பு... இதற்கிடையே, நேரில் சந்தித்த சில தினங்களிலேயே எனது காதலை அவரிடம் சொன்னேன். ஆனால், அப்போது பதில் ஏதும் சொல்லாமல் அவர் அமைதியாகச் சென்று விட்டார். தொடர்ந்து நான் அவரை தொந்தரவு செய்ததால் தனியாக செல்லாமல் தன் தந்தையை துணைக்கு அழைத்துக் கொண்டு ரயில் நிலையத்திற்கு சென்று வந்தார்.
தோற்றம் குறித்து விமர்சனம்... ஆனபோதும் ரயில் நிலையத்தில் காத்திருந்து அவரிடம் 2 முறை நான் பேசினேன். அப்போது ஒரு முறை நான் தேவாங்கு போல் இருப்பதாகவும், என்னிடம் இனி பேசாதே என்றும் என் தோற்றத்தைக் குறித்து தரக்குறைவாக பேசினார். அப்போதே எனக்கு அவரது வாயைக் கிழிக்க வேண்டும் என ஆத்திரம் வந்தது. ஆனால், அவர் மீது கொண்ட காதலால் அமைதியாக திரும்பி விட்டேன்.
கொலை... மீண்டும் 24-ந் தேதி ரயில் நிலையதில் சுவாதியைச் சந்தித்தேன். அப்போது என் காதலை ஏற்றுக் கொள்ளும்படி அவரிடம் மீண்டும் கெஞ்சினேன். ஆனால் அப்போதும் அவர் மறுக்கவே ஆத்திரத்தில் அவரது வாயில் அரிவாளால் வெட்டி கொலை செய்தேன்' எனத் தெரிவித்துள்ளார்.
ஒருதலைக் காதல்... இதன்மூலம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் உருவான ஒருதலைக் காதல் தான் இன்று சுவாதியின் உயிரைப் பறித்து, ராம்குமாரையும் தற்கொலைக்குத் தூண்டி அவரைக் கொலையாளியாக மாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது.
No comments:
Post a Comment