இன்போசிஸ் சாப்ட்வேர் என்ஜீனியர் சுவாதி கொலையில் சிக்கி கைதாகியுள்ள ராம்குமாரிடம் ஐஏஎஸ் கனவு இருந்துள்ளது. ஆனால் அவரது குணத்தில் இடையில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் மாற்றத்தால் பாதை மாறிப் போய் இப்போது வாழ்க்கையைத் தொலைத்து நிற்கிறார். நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி மீனாட்சிபுரம் கிராமத்தில் உள்ள அம்பேத்கார் தெருவில் வசிக்கும் தொலைப்பேசி ஊழியர் பரமசிவன் குடும்பமே இன்று சோகமாக உள்ளது. அவரது மகன் ராம்குமார் இன்று கொலையாளியாக நிற்கிறார். ராம்குமார் குறித்து மேலும் மேலும் பல தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆலங்குளத்தில் உள்ள தனியார் என்ஜீனியரிங் பி.இ.படித்துள்ளார் ராம்குமார். இதற்காக செங்கோட்டையில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 3.20 லட்சம் கல்விக் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
படிப்பை முடிக்க வந்தார் பொறியாளர் படிப்பிலும் 3 அரியர்கள் விழவே அவர் சென்னை சென்று சிறப்பு பயிற்சி மையத்தில் படித்து பி.இ.பாஸ் செய்வேன் என்று தெரிவித்து உள்ளார். அதன்படி சென்னை வந்தார். சூளைமேட்டில் தங்கியுள்ளார்.
ஐஏஎஸ் கனவு இந்நிலையில் ராம்குமார் குறித்து அவரது கிராமத்தில் விசாரித்தபோது பல புதுத் தகவல்கள் கிடைத்தன... ஐஏஎஸ் கனவோடு படித்து வந்துள்ளார் ராம்குமார். ஆரம்பத்தில் படிப்பில்தான் கவனம் வைத்திருந்தார். இடையில் அது மாறியுள்ளது.
இடையில் திசை மாறல் படிப்பில் கவனம் சரியவே 3 அரியர்கள் விழுந்துள்ளன. இந்த நிலையில்தான் சுவாதி மீதான காதலை மனதுக்குள் வரித்துக் கொண்டுள்ளார். அதில் அவருக்கு பெரும் ஏமாற்றமே கிடைத்துள்ளது. இதுதான் கொலை வரை போய் விட்டது.
கொலை திட்டம் சுவாதியுடன் மோதல் ஏற்பட்ட பின்னர் மீனாட்சிபுரம் திரும்பியுள்ளார் ராம்குமார். வந்த இடத்தில்தான் கொலைத் திட்டத்தை அவர் யோசித்துள்ளதாக கூறப்படுகிறது. தனக்கு அக்கா முறை வரும் ஒருவரது வீட்டிலிருந்து அரிவாளை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.
கம்பிகளுக்குப் பின் மிச்ச வாழ்க்கை கலெக்டர் ஆக வேண்டும் என்பதுதான் ராம்குமாரின் கனவாக இருந்துள்ளது. ஆனால் இன்று சிறைக் கம்பிகளுக்குப் பின் காலம் முழுவதையும் கழிக்கும் நிலைக்கு அவர் போயுள்ளார்.
No comments:
Post a Comment