முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் அவருக்கு சிலை நிறுவ உலமாக்கள் சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராமநாதபுரத்தில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் உயர் நிலைக் குழுக் கூட்டம் அதன் தலைவர் ஏ.வலியுல்லா ஹழரத் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு சிலை வைப்பது இஸ்லாமிய மார்க்கத்துக்கு விரோதமானது. இதுவரை இஸ்லாமியத் தலைவர்கள் யாருக்கும் சிலை வைக்கப்படவில்லை. சிலை வைப்பது இஸ்லாமிய மக்களின் மதஉணர்வுகளைப் புண்படுத்துவதாகும். எனவே மத்திய, மாநில அரசுகள் அப்துல் கலாமுக்கு மணிமண்டபம், நூலகம், ஆராய்ச்சிக்கூடம் அமைப்பது போன்றவற்றை மட்டும் செயல்படுத்த வேண்டும். மேலும் உருவச் சிலை வைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உலமாக்கள் பலரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment