Latest News

ஜெர்மன் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு! - 9 பேர் பரிதாப பலி


ஜெர்மன் நாட்டில்,ஒரு வணிக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜெர்மன் நாட்டின், முனிச் நகரில் அமைந்துள்ள ஒலிம்பிய வணிக வளாகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த வணிக வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். இந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டில், அங்கிருந்த பொதுமக்கள் பீதி அடைந்து, உயிர் பிழைக்க அங்குமிங்குமாக  ஓட்டம் பிடித்தனர்.

ஆனாலும் இந்த துப்பாக்கிச் சூட்டில், 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இது பற்றி அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஜெர்மனியில் வசித்து வரும் ஈரான் வம்சாவளியை சேர்ந்தவர் என்று கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் தாக்குதல் நடத்திய 18 வயதே ஆன இளைஞர், தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொன்று தற்கொலையும் செய்து கொண்டார். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான நோக்கம் என்ன என்று உடனடியாக தெரியவில்லை. முன்னதாக இந்த தாக்குதலை மூன்று நபர்கள் நடத்தியதாக தகவல்கள் வெளியான. ஆனால், ஒருவர் மட்டுமே துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி ஜெர்மனி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக, மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் பாதுகாப்பை அதிகரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கேல் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தைக் கூட்டி உள்ளார்.

இதற்கிடையே,  ஜெர்மனியில் உள்ள இந்தியர்களின் நலன் கருதி, அவர்களுக்கு அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  0171 2885973, 01512 3595006, 0175 4000667 ஆகிய எண்களில் அழைத்து,  இந்தியர்கள் அவசர உதவி பெறலாம் என்று அந்நாட்டில் உள்ள இந்திய தூரகம் அறிவித்து உள்ளது.

ஜெர்மன் நாட்டில், கடந்த வாரம் ரயிலில் இளைஞர் ஒருவர் பயணிகளை கோடாரியால் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அடங்குவதற்குள், தற்போது நடைபெற்றுள்ள துப்பாக்கிச் சூடு சம்பவம் அந்நாட்டு மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.