திமுக, காங்கிரஸ், தமாகா, மார்க்சிஸ்ட், தேமுதிக கட்சிகளைச் சேர்ந்த 31,834 பேர் இன்று ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மதிமுகவின் மத்திய சென்னை முன்னாள் மாவட்ட செயலாளர் ரெட்சன் அம்பிகாபதியுடன் ஆயிரக்கணக்கான மதிமுகவினர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். இணைப்பு விழாவில் வரவேற்று பேசிய அதிமுக பொதுச்செயலாளரும்
முதல்வருமானஜெயலலிதா, அதிமுகவில் இணைந்தவர்களின் அரசியல் வாழ்வில் புது வசந்தம் மலரும் என்று கூறினார். சட்டசபை தேர்தல் முடிவுக்குப் பின்னர் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். தே.மு.தி.க., மதிமுக நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி வருகிறார்கள். முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் ஏற்கனவே அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவ்வகையில் இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய ஏராளமானோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். இதற்கான நிகழ்ச்சி ராயப்பேட்டையில் இன்று பிற்பகல் நடந்தது.
31834 பேர் இணைப்பு முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 31,834 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளை ஜெயலலிதா வழங்கினார்.
தேமுதிக நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் பெரம்பூர் பகுதி செயலாளர் பி.முகமதுஜான் தலைமையில் வடசென்னை மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் 1000 பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். கொளத்தூர் பகுதி செயலாளர் எஸ்.என்.பாலாஜி, திரு.வி.க.நகர் பகுதி செயலாளர் ஜெ.எஸ்.லிங்கன், பெரம்பூர் பகுதி வட்ட செயலாளர்கள் எஸ்.செல்வன், சசிக்குமார், நாகப்பன், திருமுருகன் ஆகியோரும் மகளிரணியைச் சேர்ந்த மாவட்ட பகுதி செயலாளர்கள் அரியம்மாள், சந்திரா, ரேவதி, நூர்ஜகான், ரதி தேவி, தமிழ்செல்வி, தேவி மற்றும் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள், கிளை செயலாளர்கள் இணைந்தனர்.
மதிமுகவின் ரெட்சன் அம்பிகாபதி ம.தி.மு.க.வில் இருந்து சமீபத்தில் விலகிய மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி தலைமையில் ம.தி.மு.க. பகுதி செயலாளர்கள், மாவட்ட துணை செயலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
உங்கள் வரவு நல்வரவு இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெயலலிதா, உங்கள் வரவு நல்வரவாகுக, இனி உங்கள் அரசியல் வாழ்வில் புது வசந்தம் வீசும் என்று கூறினார். அனைவரையும் ஒற்றுமையுடன் இதே உற்சாகத்துடன் கட்சிப்பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.
உள்ளாட்சி தேர்தலுக்கு உழையுங்கள் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்றும், வெற்றிக்காக கட்சியினர் அனைவரும் தீவிரமாக உழைக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், இன்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 31,834 பேர் கட்சியில் இணைந்திருப்பது மகிழ்ச்சி என்றும் பேசினார்.
No comments:
Post a Comment