தேமுதிக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் மக்கள் நல கூட்டணியில்தான் நீடிக்கின்றன என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தலில் எந்த கட்சியோடு கூட்டணி வைப்பது என்பது பற்றி முடிவெடுக்க தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார். 24ம் தேதி மக்கள் நல கூட்டணி சார்பில், நடைபெற உள்ள இப்தார் நிகழ்ச்சிக்கான நிரலில் தேமுதிக பெயர் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதுபோன்ற காரணங்களால் மக்கள் நலகூட்டணியோடு இணைந்து சட்டசபை தேர்தலை சந்தித்த, தேமுதிக மற்றும் த.மா.கா கட்சிகள், தற்போது கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. சென்னையில் இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்த மக்கள் நல கூட்டணியிலுள்ள ஒரு கட்சியான விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்த செய்திகளை மறுத்துள்ளார். தமாகா மற்றும் தேமுதிக இரு கட்சிகளுமே மக்கள் நல கூட்டணியில் தொடருவதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும், கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவும், அதிமுகவும் சட்டசபைக்குள் மோதலில் ஈடுபடுவதற்கு அதிருப்தி வெளிப்படுத்திய அவர், சட்டசபையில் ஆக்கப்பூர்வ விவகாரங்களை பேச வேண்டும் என கேட்டுக்கொண்டார். கச்சத்தீவு விவகாரத்தில்
உண்மையிலேயே துரோகம் இழைத்தது அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் என்று கூறிய திருமாவளவன், வயதில் மூத்த அரசியல் தலைவரான கருணாநிதி குறித்து மிக மோசமாக விமர்சனம் செய்வதை ஆளும் கட்சியினர் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment