வெளியில் தெரியாமல் ஊழல் செய்வதில் எப்போதும் வல்லவர்கள் என்ற வரலாற்றை காங்கிரஸ் தக்க வைத்து கொண்டு வருகிறது எனவும் காங்கிரசுக்கு தி.மு.க.வும் சளைத்தது அல்ல என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில்
அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை எதிர்ப்பு தின கூட்டம் பாஜக சார்பில் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியாதாவது: வெளியில் தெரியாமல் ஊழல் செய்வதில் எப்போதும் வல்லவர்கள் என்ற வரலாற்றை காங்கிரஸ் தக்க வைத்து கொண்டு வருகிறது. காங்கிரசுக்கு தி.மு.க.வும் சளைத்தது அல்ல எனக் கூறினார்.
மேலும், அவர் பேசுகையில், பாஜக உயரிய நோக்கத்தோடு நாட்டின் ஒற்றுமையை உணர்ந்து ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் சிறப்பான பல திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இதன் பலன்களை மக்கள் மட்டுமே நேரடியாக அனுபவிக்க முடியும். முள் படிகளை கடந்தால் மட்டுமே உயரிய லட்சியங்களையும் நினைத்த இலக்கையும் எட்ட முடியும். இதை
உணர்ந்துதான் அர்ப்பணிப்பு உணர்வுடன் பிரதமர் மோடி நமது நாட்டின் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். மோடியின்
செயல்பாடுகளை உலக நாடுகளே உன்னிப்பாக கவனித்து வருகின்றன. மக்களுக்காக உழைக்கும் ஒரே கட்சியாக பாஜக மட்டுமே இருந்து வருகிறது. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
No comments:
Post a Comment