கிரானைட் முறைகேடு வழக்கில், சகாயம் அறிக்கை அடிப்படையில், ஒருங்கிணைந்த செயல் திட்டம் தேவை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் செயல் திட்டம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். எனக்கூறி வழக்கு விசாரணையை ஜூலை 28 ம் தேதிக்கு ஹைகோர்ட் ஒத்திவைத்துள்ளது. சகாயம் அறிக்கை அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் தேவை எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடந்த கனிம வள முறைகேடு குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும் என டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மதுரை மாவட்ட கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி தொடங்கி 2015 அக்டோபர் வரை 21 கட்டமாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 7 ஆயிரம் பக்க ஆவணங்கள், 600 பக்க இறுதி அறிக்கையை சகாயம் குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த முறைகேட்டில் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதால் சிபிஐ சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று குழு கூறியுள்ளது. கிரனைட் முறைகேட்டில் ஒரு லட்சத்து ஆறாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு
No comments:
Post a Comment