ஆர்.கே.நகருக்குத்தான் எத்தனை எத்தனை பிரபலங்கள் பாருங்கள்.. ஆர்.கே.நகர் போலீஸார் ஒரு திருடனைக் கைது செய்துள்ளனர். பிறப்பால் இஸ்லாமியரான இவர் ஒரு தீவிர அம்மன் பக்தர். அதை விட முக்கியமானது, இவர் முஸ்லீம்களின் வீடுகளில் மட்டுமே திருடுவதை வழக்கமாக வைத்துள்ளார். நீண்ட காலமாக டிமிக்கி கொடுத்து வந்த 28 வயதான இந்த "திருடர்" ஆர்.கே.நகர் போலிஸில் ஒரு வழியாக சிக்கியுள்ளார். 28 வயதில் 28 திருட்டு வழக்குகளில் இவர் தொடர்பு வைத்துள்ளார். இதில் 3 திருட்டுச் சம்பவத்தில் மட்டும்தான் இவர் எதையும் திருட முடியாமல் போயுள்ளார். மற்ற 25 திருட்டுச் சம்பவத்திலும் நகையைத் திருடிக் கொண்டு தப்பியுள்ளார்.
இவரிடமிருந்து 95 பவுன் நகையைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவரது பெயர் ரஹமதுல்லா. புளியந்தோப்பு பகுதியில் உள்ள வஉசி நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர். புளியந்தோப்புப் பகுதியில் இவர் திருட வந்தபோது போலீஸார் சாதுரியமாக வலை விரித்து இவரை வளைத்துப் பிடித்தனர். கைது செய்யப்பட்ட ரஹமதுமல்லாவை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த பின்னர் அவரது வீட்டில் சோதனையிடுவதற்காக போலீஸார் அங்கு சென்றனர். வீட்டுக்குள் போனால் போலீஸாருக்கு பயங்கர ஷார். காரணம், வீடு முழுக்க சுவரில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் படங்களாக இருந்தது. என்னப்பா இது என்று ரஹமதுல்லாவிடம் கேட்டால், நான் அம்மாவின் தீவிர பக்தன் அதாவது மேல் மலையானூர் அங்காளம்மனின் தீவிர பக்தன் என்று கூறி போலீஸாரை தெளிவாக குழப்பியுள்ளார் ரஹமதுல்லா. சரி அதை அப்புறம் பார்த்துக்கலாம், முதலில் நீ எப்படித் திருடுவாய் என்று அவரது தொழில் ரகசியத்தைக் கேட்டுள்ளனர் போலீஸார். அதை ரஹமதுல்லா விவரிக்க மேலும் மேலும் சுவாரஸ்யம் கூடிக் கொண்டே போனது போலீஸாருக்கு. ரஹமதுல்லா மாலை நேரங்களில்தான் பெரும்பாலும் திருடப் போவாராம். அதிலும் சனி, ஞாயிற்றுக்கிழைகள்தான் அவருக்கு திருட்டுக்கு உகந்த நாட்களாகும். மேலும் முஸ்லீம் வீடுகளை மட்டுமே அவர் குறி வைத்துத் திருடுவாராம். எப்போதும் தலையில் குல்லாவோடுதான் ரஹமதுல்லா இருப்பார். தான் குறி வைக்கும் வீடு அல்லது கட்டடத்திற்கு குறிப்பிட்ட நாட்களில் தலையில் குல்லாவோடு கிளம்பிப் போய் விடுவார். அங்கு யாரும் இருக்க மாட்டார்கள். அதைமுன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொண்டுதான் என்ட்ரியே கொடுப்பாராம் ரஹமதுல்லா.

சரியாக மாலை 4.30 முதல் இரவு 7.30 மணிக்குள் தனது கைவரிசையைக் காட்டி விட்டு ஏரியாவை விட்டு கிளம்பி விடுவாராம் ரஹமதுல்லா. திருடப் போகும் போது பக்கா முன்ஏற்பாடுகளுடன் போவது ரஹமதுல்லாவின் வழக்கம். "வேலை"க்குப் போகும்போது என்னெல்லாம் தேவையோ எல்லாவற்றையும் ஒரு "கட்டப்: பையில் போட்டுக் கொண்டு கிளம்புவாராம். ஸ்பானர், ஸ்கூர டிரைவர், சுத்தியல் என சகல சாமான்களும் அந்தப் பையில் இருக்குமாம். கதவை உடைக்க, திறக்கத் தேவையான அம்சங்களுடன்தான் "தொழிலுக்கு"க் கிளம்புவாராம் ரஹமதுல்லா. இவரிடம் ஒரு டிவிஎஸ் ஜூபிடர் பைக் உள்ளது. அதில்தான் போவார், வருவார். தான் திருட்டில் ஈடுபடும் வீட்டுக்கு சற்று தூரத்தில் அதை நிறுத்திக் கொள்வார். யாருக்கும் எந்த சந்தேகமும் வராத வகையில் படு இயல்பாக திருடப் போகும் இடத்தை சென்றடைவாராம் ரஹமதுல்லா. நேராக தான் குறி வைத்துள்ள வீட்டுக்குச் சென்று பூட்டைப் பார்க்கும் அவர் பின்னர் திரும்பி பைக்குக்கு வந்து தேவையான சாமானை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு போய் நைசாக பூட்டைத் திறந்து உள்ளே போய் நகைகளைத் திருடிக் கொண்டு திரும்பிச் சென்று விடுவாராம். திருடும் வீட்டில் கால் மணி நேரத்திற்கு மேல் இருக்கவே மாட்டார். எதுவும் தேறாவிட்டால் சத்தம் போடாமல் வெளியே போய் விடுவாராம். கிடைத்ததை தெளிவாக எடுத்துக் கொண்டு பக்காவாக வெளியேறி விடுவாராம். இவர் இதுவரை எந்த காவல் நிலையத்திலும் புகார் இல்லை. திருட்டில் ஈடுபட்டு வந்தார் என்பது மட்டுமே போலீஸாருக்கு சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் தெரிய வந்தது. ஆனால் அவர் மீது எந்தக் காவல் நிலையத்திலும் புகார்கள் இல்லாததால் இவரைப் பிடிப்பது போலீஸாருக்குப் பெரும் சவாலாக மாறியது. இவரது திருட்டுக்களை தொடர்ந்து கண்காணித்து வந்த போலீஸார் சனி மற்றும் ஞாயிறு மட்டுமே இவர் திருடுவதையும், ஒரே மாதிரியாக செயல்படுவதையும் கண்டுபிடித்து அவருக்கு வலை விரித்தனர். அதில் தற்போது இவர் சிக்கிக் கொண்டார். இவர் திருட்டில் ஈடுபட்டுள்ள பகுதிகள் அனைத்துமே ஆர்.கே.நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டவை என்பது முக்கியமாக கவனிப்படப்பட வேண்டியதாக உள்ளது. அதேபோல வண்ணாரப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை ஆகிய காவல் நிலையங்களிலும் இவர் மீது வழக்குகள் உள்ளன.
No comments:
Post a Comment