பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து துறையில் 100% அன்னிய நேரடி முதலீட்டுக்கு அதிரடியாக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் அன்னிய நேரடி முதலீட்டுக்கு இந்திய பொருளாதாரம் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு இன்று அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் அதிரடி மாற்றங்களை செய்துள்ளது. பாதுகாப்பு, விமான போக்குவரத்து துறையில் 100%; மருந்துகள் துறையில் 74% நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இது 2015-ம் ஆண்டுக்கு பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பெரிய மாற்றம் இதுவாகும். இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment