ஆயிரம்விளக்கு தொகுதியில் அமைக்கப்பட்ட 2 வாக்குச்சாவடிகளை கைப்பற்ற முயன்றதாக அமைச்சர் வளர்மதியின் மகன் மூவேந்தன் மீது மாநகர காவல் ஆணையரிடம் திமுக புகார் அளித்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கு.க. செல்வம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, வாக்குப்பதிவு நடந்த அன்று ஆயிரம்விளக்கம் தொகுதியில் அமைக்கப்பட்டிருந்த 45 மற்றும் 46வது வாக்குச்சாவடிகளை அமைச்சர் வளர்மதியின் மகன் மூவேந்தன் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து கைப்பற்ற முயன்றார். எனவே, அவர் மீதும் அவரது ஆதரவாளர்கள் 14 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment