சட்டசபை தேர்தலில் திமுக தோல்வி அடைய அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேர்தல் ஆணையமே காரணம் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டதாக திமுக தலைவர் கருணாநிதியும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்
இந்நிலையில் இது குறித்து கருணாநிதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தேர்தல் ஆணையம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்து செயல்பட்டது. தேர்தல் பணிகள் துவங்கியதில் இருந்தே தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒருதலை பட்சமாக செயல்பட்டது.
ஜெயலலிதா தமிழகத்தின் நன்மைக்காக திமுகவுடன் சேர்ந்து செயல்பட ஜெயலலிதா விருப்பம் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு நல்லது நடக்கும் எனில் அதிமுகவுடன் சேர்ந்து பணியாற்ற நாங்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதை வரலாறு தெரிவிக்கும்.
தஞ்சை தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சியில் திட்டமிட்டபடி தேர்தல் நடந்திருந்தால் திமுக வென்றிருக்கும். தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் எங்களின் வெற்றி வாய்ப்புக்கு பாதிப்பு இல்லை.
No comments:
Post a Comment