சென்னையில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கொளுத்திய வெயிலுக்கு வெந்து போயிருந்த சென்னைவாசிகள் இப்போதுதான் குளிர்ந்த காற்றை அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர். வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை வலுப்பெற்றுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் ஒரு பக்கம் எச்சரித்து வரும் நிலையில், சென்னையில் கடுமையான மழை பெய்யும் எனத் தெரிகிறது. வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எச்சரிக்கிறார் தமிழ்நாடு வெதர்மேன். மழை என்று வந்து விட்டாலே பலருக்கும் ரமணன் நினைவுக்கு வருவார்கள். சமூக வலைத்தளவாசிகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் போடும் பதிவுகள்தான் நினைவுக்கு வரும். சென்னை வெள்ளம் வந்த போது அவர் போட்ட பதிவுகள் பலருக்கும் உதவி செய்தது. ரமணன் பணி ஓய்வு பெற்று விட்டார் அவருக்கு பதிலாக வானிலை அறிக்கை கூறி வருகிறார் பாலச்சந்திரன். இது இவர் கூறும் முதல் புயல் எச்சரிக்கை. கடந்த 2 மாதங்களாகவே வெப்பநிலை அறிக்கை மட்டுமே சொல்லி வந்த பாலச்சந்திரன், கடந்த இரு தினங்களாகத்தான் மழையைப் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார்.
தமிழ்நாடு வெதர்மேன் 'தமிழ்நாடு வெதர்மேன்' என்ற பெயரில் இணையத்தில் இயங்கி வரும் பிரதீப் ஜான். சென்னை வெள்ளத்தின் சமயத்தில் கடுமையான மழைபெய்யும் என முன்னரே கணித்துச்சொன்னார். இவரது வானிலை கணிப்புகள் சென்னை வெள்ளத்தின்போது பெரும்பாலும் சரியாகவே இருந்தன.பாராட்டிய கருணாநிதி அரசியல் தலைவர்கள் பலரும் மழை வெள்ளம் பற்றிய தங்கள் அறிக்கையில் இவரைப் பற்றிச்
சுட்டிக்காட்டியிருந்தார்கள். தமிழகத்திலே எந்தப் பகுதியிலே எவ்வெப்போது கன மழை என்று இந்த இளைஞர் ஆராய்ந்து தெரிவிக்கும் முன்னறிவிப்புகள் உண்மையாகவும், உதவிகரமாகவும் இருப்பதாகப் பலரும் சொல்கிறார்கள். நானும் அந்த இளைஞருக்கு என்னுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று திமுக தலைவர் கருணாநிதியும் பாராட்டியிருக்கிறார்.
ஆலங்கட்டி மழை இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் வெப்பச்சலனம் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்யும் என சொல்லியிருந்தார். பிரதீப் சொன்னபடி சென்னையில் ஆலங்கட்டி பெய்யாவிட்டாலும், சென்னை புறநகர் மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. சென்னையில் மழை இந்நிலையில், நேற்றும் இன்றும் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்துள்ளது. நாகை, பாம்பனில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெதர்மேன் தன்னுடைய வலைப்பதிவில், கருத்து கூறியுள்ளார். சென்னையில் இரவு முதல் பெய்த மழை 100 மிமீ மழையை கடந்து விட்டது.

வெள்ளம் வரும் சென்னையில் கடுமையான மழை பெய்யும் எனத் தெரிகிறது. வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உடனே டிசம்பர் 1 வெள்ளம் போல இருக்குமா என்று கேட்காதீர்கள். காற்றழுத்த தாழ்வுநிலையின் நகர்வைப் பார்த்தால் கனமழை இருக்கும் என்றே தெரிகிறது. வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மறுபடியும் ஒரு வெள்ளமா? எவ்வளவோ பார்த்த சென்னைவாசிகள் கோடை கால வெள்ளத்தையும் சமாளிப்பார்கள் என்றே தோன்றுகிறது.
No comments:
Post a Comment