சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் நாள் அன்று பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றது.
இதற்காக தமிழகம் முழுவதும் 68 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 9 ஆயிரத்து 621 பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.eciresults.nic.in என்ற
இணையதளத்தில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை பார்க்கலாம். 5 நிமிடத்திற்கு ஒரு முறை இணையதளத்தில் முடிவுகள் அப்லோடு செய்யப்படும். வாக்கு எண்ணும் பணியை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமை செயலகத்தில் இருந்தே கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment