பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்
அண்மைக் காலமாக தமிழகமெங்கும்
- குறிப்பாக காலம் காலமாக அமைதியும் ஆரோக்கியமு செழித்துத்திகழும் நமதூரில்
உயிர்க்கொல்லி நோயான “கேன்ஸர்” என்ற புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின்
எண்ணிக்கை அதிகரித்துவருவதும்; இக்கொடியநொயால், நமது உற்றத்திலும் சுற்றத்திலும் உள்ள பல சகோதர
சகோதரிகள் விலைமதிக்க முடியாத நமது இன்னுயிரை இழப்பதும்; நமது
அனைவரையும் மிகுந்தகவலையிலும் பெரும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. இந்த
அபாயகரமான நிலையிலிருந்து நமது மக்களை இறைவன் அருளால் முடிந்த அளவு மீட்டு
எடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது நம் அனைவரின் பொறுப்பும் கடமையுமாகும்.
இம் முயற்சியின் ஒரு பகுதியாக
புற்றுநோய் குறித்து சிறு விழிப்புணர்வு நமதூரிலும் ஏற்படுத்தும் விதமாக இந்த
பயங்கர நோய் ஏன்? எதனால் ஏற்படுகிறது? எப்படியெல்லாம் பரவுகிறது? இதற்கான
பரிசோதனைகள், சிகிச்சைகள் என்னென்ன? இந்நோயிலிருந்து
பாதுகாப்பதற்கான வழி முறைகள் என்னென்ன? என்பது குறித்து விபரங்கள்
பொது மக்கள் நலன் கருதி நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இறைவன்
கிருபையால் இக்கொடிய நோயை விட்டும் பொது மக்கள் பாதுக்கக்கும் முயற்சியில் TIYA ஈடுபடுவேண்டுமென்ற
நோக்கத்தில் 29.04.2016 அன்று MEHA அமீரக நிர்வாகிகளை நமது TIYA நிர்வாகிகள் சந்தித்து ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது இன்ஷா அல்லாஹ் விரைவில்
நமதூர் அதிரையில் மிக பெரிய புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மருத்துவ
முகாம் ஏற்ப்படுத்துவதேன அமீரக TIYA நிர்வாகிகள் முயற்ச்சியில்
ஈடுபட்டுயுள்ளோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நாம்
அனைவருக்கு ஆரோக்கியத்தைத் தந்து எல்லாவிதமான் நோய் நொடிகளை விட்டும்
பாதுகாப்பானாக! ஆமீன்.
என்றும் அன்புடன்
அமீரக TIYA நிர்வாகிகள்



No comments:
Post a Comment