Latest News

  

நண்பர்களுடன் சேர்ந்து குளித்தபோது கடலில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் சாவு


பெசன்ட்நகர் கடலில் நண்பர்களுடன் சேர்ந்து குளித்த என்ஜினீயரிங் மாணவர் கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

என்ஜினீயரிங் மாணவர்

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தை சேர்ந்தவர் திம்பேஷ்வர் தமுலி. இவருடைய மகன் ஜோதிஷ்மேன் தமுலி. இவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

ஜோதிஷ்மேன் தமுலி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு கல்லூரி விடுதியில் இருந்து வெளியே வந்துள்ளார். அங்கிருந்து புறப்பட்டு சென்னை பெசன்ட்நகர் கடற்கரைக்கு வந்தார். கடல் அலையை பார்த்ததும் நண்பர்களுடன் சேர்ந்து கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது வந்த ராட்சத அலை ஜோதிஷ்மேன் தமுலியை கடலுக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்த அவருடைய நண்பர்கள் கதறினார்கள்.

சிகிச்சை பலனின்றி சாவு

இதையடுத்து, அருகில் இருந்த மீனவர்கள் உடனே கடலுக்குள் குதித்து அவரை தேடினார்கள். ஆனால் உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர், பெரிய அலை ஒன்று ஜோதிஷ்மேன் தமுலியை வெளியே கொண்டு வந்து தள்ளியது.

மூச்சுத்திணறலுடன் இருந்த அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாஸ்திரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இளம்பெண் தற்கொலை

* கொரட்டூர் பழைய தபால் நிலைய ரோட்டை சேர்ந்த சத்தியமூர்த்தி மகள் ராகவி (20). என்ஜினீயரிங் மாணவி. தனது சகோதரி திட்டியதால் மனவேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

* கத்திப்பாரா சுரங்கப்பாதையில் நடந்து சென்ற ஆலந்தூர் ஆப்மென் தெருவை சேர்ந்த அரசு ஊழியர் செல்வி (42) என்பவரிடம் 7 பவுன் தங்கச்சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

இதேபோல, ஆலந்தூர் நோபால் தெருவை சேர்ந்த செல்வி (33) என்பவரிடமும் 5 பவுன் சங்கிலியை மர்மஆசாமிகள் பறித்து சென்றனர்.

* பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த, மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெருவை சேர்ந்த வினோத்குமார் (23) தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

* கடந்த 5-ந் தேதி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே தஞ்சாவூரை சேர்ந்த பாரிவேல் நடந்து சென்றார். அப்போது ஆட்டோ மோதியதில் படுகாயம் அடைந்த அவர் நேற்று ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.

ஏரியில் பிணம்

* பெருங்குடி ஏரியில் நேற்று காலை 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாக மிதந்தார். அவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த சூளைமேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்த ராஜக்கனி (87) என்பவர் தூக்குப்போட்டு இறந்தார்.

* மாடம்பாக்கம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு கிடந்த பொருட்கள் எரிந்து நாசமானது.

* ஆவடி அண்ணாசிலை அருகே எச்.வி.சாலையில் நேற்று மதியம் நடந்து சென்ற 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சுருண்டு விழுந்து இறந்தார். அவர் குடிபோதையில் விழுந்து இறந்தாரா? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.