திமுகவும், அதிமுகவும் பிணத்தில் கூட பணம் பார்க்கும் கட்சிகள் என தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறுகையில்,
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி தான் மாற்று ஆகும். கடந்த 50 ஆண்டு கால ஆட்சியில் ஊழலும், லஞ்சமும் பெருகியுள்ளது. தமிழக மின்சாரத் துறையில் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் நத்தம் விஸ்வநாதன் நிச்சயம் டெபாசிட் இழப்பார். 100 ஆண்டுகளானாலும் அதிமுகவும், திமுகவும் டாஸ்மாக் கடைகளை மூடவே மாட்டார்கள். மக்கள் நலக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தான் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். 108 ஆம்புலன்ஸில் பணம் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. திமுகவும், அதிமுகவும் பிணத்தில் கூட பணம் பார்க்கும் கட்சிகள் என்றார்.
No comments:
Post a Comment