திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருவாரூர் மாவட்ட செயலரான மாசிலாமணி அறிவிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் தொகுதியில் 2-வது முறையாக திமுக வேட்பாளராக கருணாநிதி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக வேட்பாளராக பன்னீர்செல்வம் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நன்னிலம் ஆனைக்குப்பத்தைச் சேர்ந்தவர்.
குடவாசலுக்கு குட்பை கடந்த தேர்தலில் கருணாநிதிக்கு எதிராக குடவாசல் ராஜேந்திரன் நிறுத்தப்பட்டார். ஆனால் திமுகவுடன் குடவாசல் ராஜேந்திரனுக்கு ரகசிய உறவு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டால் பன்னீசெல்வத்துக்கு இம்முறை ஜெயலலிதா வாய்ப்பு அளித்துள்ளார்.
திருவாரூருக்கு போராட்டம் தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணியில் திருவாரூர் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதிகளிஅ அனைத்து கட்சிகளுமே தங்களுக்கு வேண்டும் எனக் கோரியிருந்தன. கடைசியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது.
முத்தரசன் மறுப்பு இங்கு கருணாநிதிக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் முத்தரசனை நிறுத்த வேண்டும் என்று தா. பாண்டியன் உள்ளிட்டோர் நினைத்தனர். ஆனால் முத்தரசனோ தமக்கு விருப்பமில்லை எனக் கூறிவிட்டார். இதில் தா.பாண்டியன் கடும் அதிருப்தி அடைந்ததாகவும் கூறப்பட்டது.
மாசிலாமணி இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலிமை வாய்ந்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் மாசிலாமணி திருவாரூர் தொகுதி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் பன்னீர்செல்வத்தைப் போல விவசாயிகள் பிரச்சனைக்காக போராடி வரும் மாசிலாமணியும் கருணாநிதிக்கு கடும் போட்டியாகத்தான் இருப்பார்.


No comments:
Post a Comment