அமெரிக்காவில் உள்ள ஹவாய் தீவின் தலைநகர் ஹோனோலுலுவில் இருந்து ஜப்பான் நாட்டில் உள்ள நரிட்டா நகருக்கு யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
அந்த விமானத்தில் பயணம் செய்த ஹயாங்டே பே (வயது 72) என்ற பயணி தனது இருக்கையில் உட்கார மறுத்தார். அத்துடன் அவர் விமானத்தின் பின் பகுதிக்கு சென்று யோகா பயிற்சியிலும், தியானத்திலும் ஈடுபடுவேன் என கூறி அடம் பிடித்தார்.
விமானத்தில் யோகா, தியானம் செய்யக்கூடாது என அவரது மனைவியும், விமான பணிப்பெண்களும் கூறி, அவரை இருக்கையில் வந்து அமருமாறு எவ்வளவோ கேட்டுக்கொண்டும் அவர் அதை ஏற்க மறுத்து விட்டார்.
பயணிகளை கொன்றுவிடுவேன் என மிரட்டலும் விடுத்தார்.
இதையடுத்து விமானி, விமானத்தை ஹோனோலுலுவுக்கு திருப்பினார். விமான நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் ஹயாங்டே பே கைது செய்யப்பட்டார். அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
அவர் ஓஹூ தீவில்தான் தங்கி இருக்க வேண்டும், மனநல சிகிச்சை பெற வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் தென்கொரியாவை சேர்ந்தவர் என்றும், தன் மனைவியுடன் 40–வது திருமண நாளை கொண்டாடுவதற்கு ஹவாய் வந்தவர் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment