அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு!
அன்பார்ந்த சகோதரர்களே...!
இன்றைய உலகத்தை பிரச்சனைகளற்ற, தூய்மையான, தெளிவான அறிவுசார் வழியில் வழிநடத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அல்குர்ஆனும், அவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் வாழ்ந்துகாட்டிய அழகிய வாழ்க்கை முன்மாதிரிகளும்தான் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
அப்பேற்பட்ட அல்குர்ஆனும், ஹதீஸ்களும் உள்ளடக்கிய கல்வி முறையை இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் வாழும் இந்திய முஸ்லீம் சமுதாய மக்களுக்கு போதித்தால் மட்டுமே சிறந்த அறிவுசார் உண்மையான சமுதாயத்தை உருவாக்கிவிட முடியும் என்று கருதி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய சிறப்பான எழுத்துக்களாலும், சொற்பொழிவுகளாலும், களப்பணிகளாலும் சாதித்து வெற்றிப்பாதையில் பயணிப்பவர்கள்தான் மதிப்பிற்குரிய C.M.N சலீம் & குழுவினர்கள்.
ஆரம்பத்தில் எழுத்துக்கள் மூலமாகவும், சொற்பொழிவுகள் மூலமாகவும் முதல் அடி எடுத்து வைத்து பல்வேறு இஸ்லாமிய பாடத்திட்டங்களை கொண்ட பள்ளிக்கூடங்கள் மற்றும் கலை & அறிவியல் மகளிர் கல்லூரிகளையும் தமிழகத்தில் ஆங்காங்கே உருவாக்கிக்கொண்டேவருகின்றார்கள் C.M.N சலீம் & குழுவினர்கள்.
அடுத்த மைல்கல்லாக பைத்துல் ஹிக்மா என்ற தலைமை பெயரின் கீழ் இத்தமிழகத்தில் இஸ்லாமிய சட்டக்கல்லூரி ஒன்றை நிறுவுவதற்காக பெரும்முயற்சி எடுத்து அதற்காக அல்லும் பகலும் ஊர் ஊராகவும், மாவட்டம் மாவட்டமாகவும், மாநிலம் மாநிலமாகவும், நாடு நாடாகவும் கடந்த ஓர் ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து பெருவாரியான மக்களிடம் இஸ்லாமிய சட்டக்கல்லூரியின் அவசியத்தையும், இஸ்லாமிய பாடத்திட்டங்கள் கொண்ட கல்விகளின் அவசியத்தையும் தொடர்ந்து எடுத்துரைத்து வெற்றிப்படிகளில் மேலும் முன்னேறி செல்கின்றனர் C.M.N சலீம் & குழுவினர்கள்.
நம் இந்திய முஸ்லீம் சமூகத்தின் வீழ்ச்சிகளுக்கு அடிப்படைக் காரணத்தை மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வாக இஸ்லாமிய பாடத்திட்டங்கள் கொண்ட இஸ்லாமிய கல்வி முறையை நவீன காலத்தோடும் நவீன வசதிகளோடும் நவீன முறைகளோடும் கொண்டு செல்ல முதல் முயற்சி எடுத்த தமிழர் C.M.N சலீம் & குழுவினர்கள்
இப்பேற்பட்ட அழகிய தருணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம் ஒன்று செல்வத்தினாலும் அல்லது உடல் உழைப்புகளினாலும் அல்லது அறிவுசார் வழிகளிலாவது C.M.N சலீம் & குழுவினர்களுக்கு உதவ முன்வருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.
அரசியலிலும், வியாபாரங்களிலும் முக்கியத்துவம் செலுத்த தொடங்கிய இந்த தமிழ் முஸ்லீம் சமூகம் அறிவுசார் மக்களை அடுத்த தலைமுறையை உருவாக்கிவிட தவறிய இந்த சூழலில் இஸ்லாமிய கல்வியும் இன்றைய உலகம் போதிக்கும் கல்வியும் இணைந்த சீரான சிறப்பான ஒழுக்கம் மிகைத்த வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ள கல்வியை கொடுக்க முயற்சித்து களம் இறங்கி வெற்றிப்படிக்கட்டுகளில் மேலே ஏறிவருகின்றனர் C.M.N சலீம் & குழுவினர்கள்.
தானும் தன் குடும்பத்தார்களும் இவ்வுலக சுகபோக வாழ்க்கை வாழவேண்டும் என்றும் அதுவே வாழ்வின் முழு திருப்தி என்று மதிமயங்கி கிடக்கும் இன்றைய இஸ்லாமிய சமூக மக்களுக்கு மத்தியில் தன் குடும்பத்தினர்களை அந்த சிந்தனைக்கு ஆட்பட்டுவிடாமல் தடுத்து தம்மால் இந்த இந்திய முஸ்லீம் சமூகம் சிறப்பான தெளிவான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் அதன் மூலம் ஈருலகிலும் வெற்றிபெற்ற சமுதாயத்தை உருவாக்கிவிடமுடியும் என்று பொதுநலச்சேவைகளில் தடம் பதித்து தொலைநோக்கு சிந்தனையோடு பிரயாணிக்கும் அர்ப்பணிப்புக்குரியவர்கள்தான் இந்த C.M.N சலீம் & குழுவினர்கள்.
இவர்களின் அனைத்து முயற்சிகளுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பறிய அருட்கொடைகளும் ஆசிர்வாதங்களும் கிடைத்து ஈருலகிலும் வெற்றி பெற்ற மக்களாக C.M.N சலீம் மற்றும் அவர்களின் குழுவினர்களும் திகழ நாமனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரம் ஏந்தி எதுஆ செய்ய முன்வருவோமாக என்று கூறி நிறைவு செய்கின்றேன்.
வஸ்ஸலாம்!
அட்மின்
பனைக்குளம் பிரதர்ஸ்

No comments:
Post a Comment