சென்னையில் காசி தியேட்டர் அருகே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு உடனடியாக தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு வெயில் கொளுத்தி வருகிறது. தலைநகர் சென்னையில் 105 டிகிரிவரை வெப்பம் பதிவாகியுள்ளதால் அனல்காற்று வீசிவருகிறது. அடிக்கும் வெயிலுக்கு சாலையில் செல்லும் கார்கள் தீப்பிடித்து எரிந்து வருகின்றன. நேற்று கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்ற கார் தீப்பற்றியது.
இந்தநிலையில் சென்னையில் இன்று காசி திரையரங்கம் அருகே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. நண்பகல் 1 மணியளவில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த காரின் எஞ்சினில் இருந்து புகை வந்தது. உடனே என்ஜின் தீப்பிடித்து எரிந்தது. தீப்பிடித்தவுடன், கார் ஓட்டுநர் காரை ஓரமாக நிறுத்தி விட்டு காரில் இருந்து இறங்கியதால் யாருக்கும் காயமில்லாமல் தப்பினர். உடனடியாக, காரில் பற்றிய தீயை தண்ணீர் ஊற்றி அணைத்ததால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
No comments:
Post a Comment