ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி களமிறங்குகிறது. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், இன்று அக்கட்சி போட்டியிட உள்ள தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் இன்னும் இரு தினங்களில் வெளியாகும் என்று அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
மே மாதம் 16ம் தேதி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 8 தினங்களே உள்ளது. அதிமுக, திமுக, பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன. மக்கள் நலக்கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இன்றைய தினம் அக்கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. ஆர்.கே.நகர் 2. சோழிங்கநல்லூர் 3. திருவள்ளூர் 4. வேலூர் 5. மைலம் 6. சேலம் தெற்கு 7. குன்னம் 8. புவனகிரி 10. பொன்னேரி 11. ஸ்ரீபெரும்புதூர் 12. செய்யூர் 13. வானூர் 14. திண்டிவனம் 15. காட்டுமன்னார்கோவில் 16. துறையூர் 17. மானாமதுரை 18. பரமக்குடி 19. சோழவந்தான் 20. வந்தவாசி 21. அரக்கோணம் 22. ஊத்தங்கரை 23. ஆத்தூர் (சேலம்) 24. திருவிடை மருதூர் 25. ராசிபுரம்


No comments:
Post a Comment