Latest News

  

எப்படியாவது சட்டசபைக்குள் நுழைந்து விடும் பாமக...!


பாமக இடத்தை தேமுதிக பிடித்து விட்டதாக பலரும் சொல்கிறார்கள். ("வாக்கு வங்கி" என்கிற விஷயத்தைத் தவிர்த்து விட்டு) சற்று ஊன்றிப் பார்த்தால் பாமகவுடன் ஒப்பிடுகையில் தேமுதிக இன்னும் வளரவே இல்லை என்பது புரியும். தான் போட்டியிட்ட முதல் தேர்தலிலிருந்து இதுவரை தொடர்ந்து ஏதாவது ஒரு வகையில் சட்டசபைக்குள் சென்றபடி உள்ளது பாமக. இது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். தனித்துப் போட்டியிட்டாலும் சரி, கூட்டணி அமைத்தாலும் சரி, பாமகவுக்கு ஏதாவது ஒரு வகையில் வெற்றி கிடைத்தே வந்துள்ளது. அது சட்டசபைத் தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி. ஆனால் தேமுதிக நிலை அப்படி இல்லை. தொடர்ந்து வரும் புள்ளிவிவரத்தைப் பார்த்தால் அது புரியும்.

1991ல் 1989ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாமக, 1991ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. வென்றவர் பண்ருட்டி ராமச்சந்திரன். தொகுதி பண்ருட்டி.1996ல் அடுத்து வந்த 1996 சட்டசபைத் தேர்தலில் பாமகவுக்கு 4 இடங்களில் வெற்றி கிடைத்தது. இது பாமக வரலாற்றில் முதல் கணிசமான வெற்றியாகும்.

2001ல் 2001ம் ஆண்டு பாமக விஸ்வரூப வளர்ச்சியைக் காட்டியது. இந்த முறை அக்கட்சிக்குக் கிடைத்த சீட் 20. யாரும் எதிர்பாராத வெற்றி இது.2006ல் 2006ம் ஆண்டு பாமக பெற்ற இடங்கள் 18. அத்தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இருப்பினும் காங்கிரஸ், பாமகவின் உதவியுடன் திமுக ஆட்சியமைத்தது.2011ல் 2011ம் நடந்த சட்டசபைத் தேர்தலில் பாமகவின் இடங்கள் சரிந்தன. அந்தத் தேர்தலில் பாமகவுக்குக் கிடைத்த இடங்கள் 3 ஆகும்.

மத்தியில் ஆதிக்கம் இது சட்டசபை நிலவரம். மத்தியிலும் சிறிது காலம் கோலோச்சியது பாமக. 2004 லோக்சபா தேர்தலுக்கு முன்பு திமுக அமைத்த மெகா கூட்டணியில் பாமகவும் இடம் பிடித்து முதலாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அமைச்சர் பதவிகளைப் பெற்றது.2014ல் அன்புமணி வெற்றி 2014 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் அது இடம் பெற்றது. இக்கூட்டணியில் தேமுதிகவும் இடம் பிடித்தது. விஜயகாந்த் அலை, மோடி அலை என்று பலவும் வீசிய போதிலும் தேமுதிக இதில் மண்ணைக் கவ்வியது. ஆனால் பாமகவின் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றார்.

தேமுதிகவை விட பெட்டர் பாமக மறுபக்கம் தேமுதிக தனது அரசியல் பாதையில் பல சறுக்கல்களைச் சந்தித்துள்ளது. அந்த வகையில் தேமுதிகவை விட பாமகவின் வாக்கு வங்கியை தைரியமாக நம்பலாம். அதனால்தான் தேமுதிக இல்லாத நிலையில் தற்போது பாமகவை நாட ஆரம்பித்துள்ளது திமுக என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.