Latest News

விஜயதாரணியின் கணவர் உடலுக்கு ஸ்டாலின், இளங்கோவன், பொன்.ராதா, வாசன் அஞ்சலி


அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் விஜயதாரணியின் கணவர் சிவக்குமார் கென்னடியின் உடலுக்கு திமுக, காங்கிரஸ் தலைவர்கள்,பிரபலங்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். விஜயதாரணியின் கணவர் சிவக்குமார் கென்னடி. வழக்கறிஞரான இவர் நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார். 50 வயதான சிவக்குமார் கென்னடிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதும், இசபெல்லா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

அந்த சமயத்தில் விஜய தாரணி டெல்லி போயிருந்தார். கணவர் இறந்த தகவல் கிடைத்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். அவசரம் அவசரமாக கிளம்பி நேற்று மாலைக்கு மேல் சென்னை திரும்பினார். கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுதார். சிவக்குமார் கென்னடி - விஜயதாரணியின் மூத்த மகள் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார். இதனால் மகளுக்கு வசதியாக அருகில் உள்ள முகலிவாக்கத்தில் வசித்து வருகிறது விஜயதாரணி குடும்பம். சிவக்குமார் கென்னடியின் உடல் அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு, மகளிர் காங்கிரஸ் பொது செயலாளர் ஹசீனா சையத் உள்பட பலரும் அஞ்சலி செலுத்தினர். நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துக்கம் கேட்ட ஜி.கே.வாசன், பொன்.ராதா அதேபோல தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் நேரில் சென்று விஜயதாரணியிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தனர்.

================================

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி கார் விபத்து: சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி சென்ற கார் நேற்று இரவு விபத்துக்குள்ளானது. இதில் சிறு காயங்களுடன் ஸ்மிருதி ராணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தாவனில் பாஜக இளைஞரணியினர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்டு விட்டு இரவு யமுனா எக்ஸ்பிரஸ் சாலை வழியாக டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார் ஸ்மிருதி இராணி.அப்போது அவரது காருக்கு முன்பாக சென்றுக்கொண்டிருந்த பாதுகாப்பு வாகனம் மீது ஒரு இருசக்கர வாகனம் மோதியது. இதனை அடுத்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஸ்மிருதி இராணியின் கால் முட்டியில் சிறிய காயம் ஏற்பட்டது. மேலும் மூன்று பாதுகாப்பு காவலர்களுக்கும் காயம் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்தவர் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.