மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாமின் ராமேஸ்வரம் நினைவிடத்தில் சுற்றுச் சுவர் அமைப்பதற்கான பணிகளில் மத்திய அரசின் பொதுப் பணித்துறை ஈடுபட்டுள்ளது.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்த இடத்தைச் சுற்றி சுவர் அமைக்க மத்திய அரசின் பொதுப் பணித்துறை சார்பில் அதிகாரிகள் நில அளவு உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபட்டனர்.
கலாமின் நினைவிடத்தை பொதுமக்களே வடிவமைத்து வருகின்றனர். முதல் கட்டமாக சுற்றுச் சுவர் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் கலாம் மணி மண்டபம் அமைக்கும் பணி முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலாம் மணி மண்டபம் அமைப்பதில் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. ஆடு, மாடுகள் அந்த இடத்தில் அசுத்தம் செய்கின்றன போன்ற குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
No comments:
Post a Comment